காங்கிரசுக்கு வாக்களிப்பதன் மூலம் புதுச்சேரியை புறக்கணித்த மோடிக்கும், லேடிக்கும் முடிவு கட்டுங்கள் - வைத்திலிங்கம் பேச்சு
புதுச்சேரி மக்களை புறக்கணித்த மோடிக்கும், லேடிக்கும் முடிவு கட்டுங்கள் என்று தேர்தல் பிரசாரத்தின்போது வைத்திலிங்கம் கூறினார்.
நெட்டப்பாக்கம்,
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் நேற்று அவருடைய சொந்த ஊரான நெட்டப்பாக்கத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். நெட்டப்பாக்கம் தொகுதி மணமேடு மற்றும் கரையாம்புத்தூர், பண்டசோழநல்லூர், நெட்டப்பாக்கம் மந்தைவெளி, மடுகரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் உண்மையான போட்டியே மோடியா?, ராகுலா? என்பதுதான். மோடி கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் மக்கள் சிறுக சிறுக சேமித்த பணத்தை அவர்கள் பயன்படுத்த முடியாதபடி செய்தார். ஜி.எஸ்.டி. வரியை கொண்டு வந்து மக்களின் வரிச்சுமையை அதிகரித்தார். ஜி.எஸ்.டி.வரியால் சிறு மற்றும் குறு தொழில்கள் பாதிக்கப்பட்டது. தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
நீட் தேர்வை கொண்டு வந்து நமது மாநில மாணவர்களின் மருத்துவ உயர் கல்வி வாய்ப்பை பறித்தார். கருப்பு பணத்தை ஒழித்து ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்றார். ஆனால் 15 பைசா கூட போடவில்லை. வருகிற 18-ந் தேதி நீங்கள் கை சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தை புறக்கணித்த மோடிக்கும், லேடிக்கும் (கவர்னர்) ஒரே நேரத்தில் முடிவு கட்ட முடியும்.
இந்த தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். ஏழை எளிய மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும். எனவே நீங்கள் கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச்செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story