மின்னணு வாக்குப்பதிவு எந்திர செயல் விளக்கம்
மின்னணு வாக்குப்பதிவு எந்திர செயல் விளக்கம் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டது.
அரியலூர்,
நாடாளுமன்ற தேர்தல் 2019 நடைபெறுவதையொட்டி வருகிற 18-ந் தேதி தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்திலுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகள் 2,854 பேருக்கு அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் எந்திரங்களை பயன்படுத்துவது குறித்து செயல் விளக்க பயிற்சி வழங்கப்பட்டது.அரியலூர் மாவட்டத்திலுள்ள அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 297 வாக்குப்பதிவு மையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள 356 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களும், 556 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் அதேபோல ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 297 வாக்குப்பதிவு மையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள 348 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களும், 348 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் 2-ம் கட்ட மறு பயிற்சி நடந்தது. மேலும் அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் செயல் விளக்க பயிற்சிகள் வழங்கப்பட்டது. பயிற்சியை சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் குல்கர்னி, மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான விஜயலட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர்.
இதில் கோட்டாட்சியர் சத்தியநாரயணன், வட்டாட்சியர் கதிரவன், மண்டல அலுவலர்கள், வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story