சென்டிரல் மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகள் நிறைவு: பெரியமேடு ஒரு வழிப்பாதை இரு வழியாக மாற்றம்


சென்டிரல் மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகள் நிறைவு: பெரியமேடு ஒரு வழிப்பாதை இரு வழியாக மாற்றம்
x
தினத்தந்தி 14 April 2019 3:14 AM IST (Updated: 14 April 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சென்டிரல் மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகள் நிறைவடைந்து விட்டதால், ராஜா சர் முத்தையா சாலையில், ஈ.வெ.ரா. சாலை சந்திப்பில் இருந்து பெரியமேடு மசூதி பாயிண்ட் வரை செயல்பட்டு வந்த ஒருவழிப்பாதை நேற்று முதல் இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

சென்னை,

அல்லிக்குளம் சாலை ஈ.வெ.ரா சாலை சந்திப்பில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருவதால், அல்லிக்குளம் சாலை தற்காலிகமாக ஒருவழிப்பாதையாக செயல்பட உள்ளது. அதன்படி ஈ.வெ.ரா. சாலையில் இருந்து அல்லிக்குளம் சாலை வழியாக சென்னை சென்டிரல் ரெயில்நிலையம் நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து அல்லிக்குளம் சாலையில் ஈ.வெ.ரா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. அந்த வாகனங்கள், அல்லிக்குளம் சாலை வழியாக பெரியமேடு மசூதி பாயிண்ட்டை சென்றடைந்து சர் முத்தையா சாலை வழியாக ஈ.வெ.ரா சாலையை சென்றடையலாம். மசூதி பாயிண்டில் இருந்து சென்டிரல் ரெயில் நிலையம் நோக்கி அல்லிக்குளம் சாலை வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
1 More update

Next Story