மாவட்ட செய்திகள்

சப்பாத்தி பூச்சி தாக்குதலால் பருத்தி செடிகள் பாதிப்பு:ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்விவசாயிகள் கோரிக்கை + "||" + Cotton plants affected by chapatis attack: Rs 30 thousand a month for the acre Farmers demand

சப்பாத்தி பூச்சி தாக்குதலால் பருத்தி செடிகள் பாதிப்பு:ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்விவசாயிகள் கோரிக்கை

சப்பாத்தி பூச்சி தாக்குதலால் பருத்தி செடிகள் பாதிப்பு:ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்விவசாயிகள் கோரிக்கை
சப்பாத்தி பூச்சி தாக்குதலால் பருத்தி செடிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம், 

நாகை பகுதிகளில் சம்பா அறுவடை பணிகள் முடிவடைந்துவிட்டன. இதனால் தற்போது கோடை சாகுபடிகளான உளுந்து, பயறு, கடலை, பருத்தி உள்ளிட்டவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். அழிச்சமங்கலம், பாலையூர் தென்பாதி, புலியூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூலம் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

பருத்தி சாகுபடிக்கு தண்ணீர் அதிகளவில் தேவைப்படுவதில்லை. 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆற்றுப்பாசனத்தையே பெரும்பாலும் நம்பியுள்ள நாகை பகுதி விவசாயிகள், ஆழ்துளை கிணற்று தண்ணீர் மூலம் பருத்தி சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறியதாவது:-

பாலையூர் தென்பாதி, அழிஞ்சமங்கலம், புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சம்பா அறுவடை பணிகள் முடிவடைந்த வயலில் புழுதி அடித்து, தண்ணீர் பாய்ச்சி பருத்தி விதைகளை விதைக்கிறோம். 4 நாட்களில் விதையானது முளைத்து 50 நாட்களில் பூ பூக்க ஆரம்பிக்கும். 100 நாட்களில் பருத்தியை பறிக்க ஆரம்பித்து விடுவோம். இடைப்பட்ட காலத்தில் சப்பாத்தி பூச்சி என்கிற ஒரு வகையான பூச்சி இனம் பருத்தியை அதிகளவில் தாக்குகிறது.

தற்போது பருத்தி சாகுபடி செய்யப்பட்டு 60 நாட்கள் ஆகிறது. சம்பாத்தி பூச்சி தாக்குதலால் பருத்தி செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வேளாண்மை துறை அதிகாரிகள், பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட பருத்தி செடிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்ய வேண்டும். பருத்தியை தாக்கும் பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது. அதற்காக எந்த பூச்சி மருந்து மற்றும் உரங்களை பயன்படுத்துவது. எந்த சூழலில் பயன்படுத்துவது என்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கவேண்டும். இவ்வாறு செய்தால் அதிக மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.

இடுபொருட்களில் விலை அதிகமாக உள்ளதால், தற்போது பருத்தி கிலோவுக்கு ரூ. 70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்தால்தான் லாபம் கிடைக்கும். பூச்சி மருந்து மற்றும் உரங்களை மானிய விலையில் அரசு வழங்கவேண்டும். சப்பாத்தி பூச்சி தாக்குதலால் பருத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சாத்தனூர் அணையை தூர்வார வேண்டும் குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
சாத்தனூர் அணையை தூர்வார வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
2. 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட சட்டசபையில் வலியுறுத்த வேண்டும் தி.மு.க. எம்.எல்.ஏ.விடம் விவசாயிகள் கோரிக்கை
8 வழிச்சாலை திட்டத்தை கைவிட சட்ட சபையில் வலியுறுத்த வேண்டும் என்று சேலத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.விடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
3. உடுமலை அருகே குட்டையை ஆக்கிரமித்து தென்னை சாகுபடி; மீட்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை
உடுமலையை அடுத்த சின்னவாளவாடியில் குட்டைைய ஆக்கிரமித்து தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த குட்டையை மீட்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4. சர்க்கரை ஆலையில் ரூ.88½ கோடி மோசடி புகார், கடனில் இருந்து மீட்க வேண்டும் - கலெக்டரிடம், கரும்பு விவசாயிகள் கோரிக்கை
தனியார் சர்க்கரை ஆலைகளில் ரூ.88½ கோடி மோசடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கடனில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கரும்பு விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
5. வேலூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
வேலூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை