திருவாரூரில் பணியில் இல்லாத மருந்தாளுநர் பணியிடை நீக்கம் சுகாதார பணிகள் துணை இயக்குனர் உத்தரவு


திருவாரூரில் பணியில் இல்லாத மருந்தாளுநர் பணியிடை நீக்கம் சுகாதார பணிகள் துணை இயக்குனர் உத்தரவு
x
தினத்தந்தி 13 April 2019 10:15 PM GMT (Updated: 13 April 2019 11:01 PM GMT)

திருவாரூரில்,் பணி நேரத்தில் பணியில் இல்லாத மருந்தாளுநரை பணியிடை நீக்கம் செய்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர், 

திருவாரூர் அருகே உள்ள கொட்டாரக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி சுகாதார பணிகள் துணை இயக்குனர்் ஸ்டான்லி மைக்கேல் ஆய்வு செய்தார். அப்போது அங்கு மருந்தாளுநராக பணியாற்றிய பைரவநாதன் பணியில் இல்லாததும், நகர்வு பணியேட்டிலும் எவ்வித பதிவும் இல்லாததும் தெரிய வந்தது.

இதேபோல் மார்ச் 2-ந்் தேதி எந்தவித அனுமதியும் இல்லாமல் பணி நேரத்தில் பணியில் இல்லாமல் இருந்ததும், மார்ச் 11-ந் தேதி நடந்த தீவிர போலியோ நோய் ஒழிப்பு திட்டத்தின் 2-ம் நாள் கள ஆய்வின்போது பணியில் இல்லாததும் தெரிய வந்தது.

இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்டபோது அவர் உரிய பதில் அளிக்கவில்லை. மேலும் அவர் மீது பொதுமக்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஸ்டான்லி மைக்கேல் விசாரணை நடத்தினார்.

இதில் டாக்டர்களின் ஒப்பம் இல்லாமல் மருந்துகள் வழங்கப்பட்டது, வரவு-செலவு கணக்கு புத்தகத்தை தணிக்கைக்கு சமர்ப்பிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மருந்தாளுநர் பைரவநாதனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மருந்தாளுநராக பணியாற்றி வந்த பைரவநாதன், அரசு ஊழியர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story