மாவட்ட செய்திகள்

பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு + "||" + On the occasion of the birth anniversary of the political party,

பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாகர்கோவில்,

நாடு முழுவதும் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதேபோல் நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க.வினர் இணைந்து மாலை அணிவித்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், மீனாதேவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கூட்டாக இணைந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., ஆஸ்டின் எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர்         கலந்து கொண்ட னர். முன்னதாக அம்பேத்கர் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

மேலும் அ.ம.மு.க. சார்பில் மாவட்ட தலைவர் பச்சைமால் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பல்வேறு அமைப்புகள், இயக்கங்களை சேர்ந்தவர்களும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு
அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி திருமானூரில் இருந்து கீழப்பழுவூர் செல்லும் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பா.ம.க. சார்பில் அரியலூர் தொகுதி செயலாளர் பிரகாஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
2. கோமாளிப்பாறையில் மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நாயக்கர் இன மக்கள் கலந்து கொண்டனர்
கோமாளிப்பாறையில் மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாயக்கர் இன மக்கள் கலந்து கொண்டனர்.
3. நினைவு தினத்தையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
நினைவு தினத்தையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
4. நினைவு தினத்தையொட்டி அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
அண்ணா நினைவு தினத்தையொட்டி அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
5. தஞ்சையில், நினைவு நாளையொட்டி அண்ணாசிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க.வினர் மாலை அணிவிப்பு
தஞ்சையில் அண்ணாவின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.