மாவட்ட செய்திகள்

மூங்கில்துறைப்பட்டு அருகே, நெல் வியாபாரியிடம் ரூ.2 லட்சம் பறிமுதல் - பறக்கும் படையினர் நடவடிக்கை + "||" + Rs.2 lakh was confiscated by paddy Dealer

மூங்கில்துறைப்பட்டு அருகே, நெல் வியாபாரியிடம் ரூ.2 லட்சம் பறிமுதல் - பறக்கும் படையினர் நடவடிக்கை

மூங்கில்துறைப்பட்டு அருகே, நெல் வியாபாரியிடம் ரூ.2 லட்சம் பறிமுதல் - பறக்கும் படையினர் நடவடிக்கை
மூங்கில்துறைப்பட்டு அருகே நெல் வியாபாரியிடம் ரூ.2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் விழுப்புரம் மாவட்டத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதுப்பட்டு பகுதியில் தேர்தல் அலுவலர் தனபால் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை மறித்து அவரது பையை சோதனை செய்தனர். அதில் ரூ.2 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் புதுப்பட்டு நடுத்தெருவை சேர்ந்த நெல் வியாபாரியான ராஜேந்திரன்(வயது 42) என்பதும், அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததும் தெரியவந்தது. இதையடுத்து ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை சங்கராபுரம் தாசில்தார் பாண்டியனிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொல்லங்கோடு அருகே சகோதரர் வீட்டில் ஐஸ் வியாபாரி மர்ம சாவு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்
கொல்லங்கோடு அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஐஸ் வியாபாரி மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
2. பூதப்பாண்டி அருகே தாய் இறந்த மறுநாளில் வியாபாரி தற்கொலை தூக்கில் தொங்கி உயிரை விட்ட சோகம்
பூதப்பாண்டி அருகே தாய் இறந்த மறுநாளில் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. பறக்கை அருகே கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை
பறக்கை அருகே கடன்தொல்லையால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. சிதம்பரத்தில், பணம் கேட்டு மிரட்டி வியாபாரி மீது தாக்குதல் - 6 பேர் கைது
சிதம்பரத்தில் பணம் கேட்டு மிரட்டி வியாபாரியை தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. அருமனை அருகே கார் மோதி பால் வியாபாரி பலி
அருமனை அருகே கார் மோதி பால் வியாபாரி பலியானார்.