மாவட்ட செய்திகள்

குருத்தோலை ஞாயிறையொட்டி புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை + "||" + Special prayers at St. Patham's Mother's Temple on Sunday

குருத்தோலை ஞாயிறையொட்டி புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குருத்தோலை ஞாயிறையொட்டி புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
திருவாரூர் புனித பாத்்திமா அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர்,

ஈஸ்டர் பண்டிகை என்னும் புனித வெள்ளி பண்டிகை வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது.இந்த விழாவின் முந்தைய ஞாயிற்று கிழமையை குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கின்றனர். இதையொட்டி திருவாரூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை பங்கு தந்தை உலகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கு மன்ற துணைத்தலைவர் ஜார்ஜ் உள்பட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


குருத்தோலை பவனி

முன்னதாக குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. இதில் திருவாரூர் கீழவீதியில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தென்னங்குருத்தோலைகளை கைகளில் ஏந்தி முக்கிய வீதிகளில் வழியாக சென்று ஆலயத்தை அடைந்தனர். இதேபோல அனைத்து திருச்சபைகளில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை பகுதியில் குறைதீர்க்கும் திட்ட சிறப்பு முகாம்
தஞ்சை பகுதியில் குறைதீர்க்கும் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
2. திருச்சி, திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கம் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவையொட்டி தெற்கு ரெயில்வே சிறப்பு கட்டண ரெயில்களை இயக்குகிறது. அதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
3. முதல்கட்டமாக 41 இடங்களில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் இன்று நடக்கிறது
தஞ்சை மாவட்டத்தில் முதல்கட்டமாக 41 இடங்களில் முதல்- அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் இன்று (வியாழக் கிழமை) நடக்கிறது.
4. சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு அஞ்சல்தலை, நாணய கண்காட்சி
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி அருங்காட்சியகத்தில் சிறப்பு அஞ்சல்தலை, நாணய கண்காட்சி நேற்று நடைபெற்றது.
5. பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி திருச்சியில் நடந்த சிறப்பு தொழுகையில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர். மேலும் குர்பானி கொடுத்து மகிழ்ந்தனர்.