செருமங்கலத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


செருமங்கலத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 April 2019 3:45 AM IST (Updated: 15 April 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

செருமங்கலத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடுவூர்,

வடுவூர் அருகே உள்ளது செருமங்கலம் கிராமம். மன்னார்குடி-தஞ்சை சாலையில் உள்ள செருமங்கலம் சாவடி பகுதியில் முறையான சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர கிராம மக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உடனடியாக தங்கள் பகுதிக்கு சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் புறக்கணிப்பு

இதில் கலந்து கொண்டவர்கள் கைகளில் கருப்புக்கொடிகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தராவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று தெரிவித்தனர்.

Next Story