மாவட்ட செய்திகள்

இந்தியாவில் கலவரங்களை ஏற்படுத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா குற்றச்சாட்டு + "||" + BJP plans to create riots in India National Secretary of Communist Party of India Accusation

இந்தியாவில் கலவரங்களை ஏற்படுத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா குற்றச்சாட்டு

இந்தியாவில் கலவரங்களை ஏற்படுத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா குற்றச்சாட்டு
இந்தியாவில் கலவரங்களை ஏற்படுத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம் சாட்டினார்.

திருப்பூர்,

தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து திருப்பூர் ராயபுரம் ரவுண்டானா பகுதியில் நேற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பகுதி செயலாளர் வடிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரவி, தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ், காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் சிவபாலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் பா.ஜனதா அரசிடம் இருந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி நாட்டை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பா.ஜனதா கட்சியால் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், அந்த அரசை அகற்ற வேண்டும். நாட்டின் சுதந்திரத்திற்கு சம்மந்தம் இல்லாத, நாட்டின் விடுதலைக்கு தொடர்பில் இல்லாத கட்சி தற்போது மத்தியில் ஆட்சி செய்து வருகிறது.

இந்தியாவை பொறுத்தவரை பல மதங்கள், இனங்கள், மொழிகள் உள்ளிட்ட பன்முகதன்மை கொண்ட நாடாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் மனுசாஸ்திர அடிப்படையிலான சட்டத்தை கொண்டுவர ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதில் இருந்து இந்தியாவும், அதன் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். இதற்கு மோடியை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிய வேண்டும். திருப்பூருக்கு கெட்டகாலத்தை ஏற்படுத்தியவர் மோடி. அவர் தற்போது தன்னை ஒரு காவலாளி என்று கூறுகிறார். ஆனால் அவர் அம்பானி, அதானி உள்ளிட்ட ஒருசில முதலாளிகளுக்கு மட்டுமே அவர் காவலாளியாக இருந்து வருகிறார். மோடி கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்தியாவில் எந்த முதலீடும், ஏற்றுமதியும் அதிகரிக்கவில்லை. பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மூலம் ஜனநாயகம் சிதைக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடருமானால் மதவெறி பாசிசம் இந்தியாவை ஆக்கிரமித்துவிடும். பா.ஜனதா கட்சியும், அதனை சார்ந்த அமைப்புகளும் இந்தியாவில் கலவரங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்து பேசி மக்களை ஏமாற்றுகிறது மோடி அரசு. தமிழக அரசு இதற்கு துணை போய் கொண்டு இருக்கிறது. மாநில உரிமைகளை காப்பாற்றும் செயலை அ.தி.மு.க. அரசு செய்யாமல் மோடியின் காலடியில் விழுந்து கிடக்கிறது.

தமிழகத்தை ஆளும் தகுதியை அ.தி.மு.க. அரசு இழந்து விட்டது. தூத்துக்குடியில் தமிழக அரசு திட்டமிட்டு படுகொலையை அரங்கேற்றியுள்ளது. மத்திய அரசின் நாசகர திட்டங்களுக்கு தமிழக விவசாய நிலங்கள் தாரைவார்க்கப்படுவதால் தமிழகத்தில் விவசாய நிலங்களின் அளவு குறைந்து கொண்டே வருகிறது.

இதனால் தமிழகமும் மீட்க படவேண்டும். 8 வழிச்சாலை திட்டம் நிறுத்தப்பட்டதற்கு பா.ம.க. தான காரணம் என்று அந்த கட்சி கூறி வருகிறது. ஆனால் தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து இந்த திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று கூறினால், அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள பா.ம.க. அதற்கு என்ன பதில் அளிக்க போகிறது. இதனால் தீய சக்தியாக இருக்கும் பா.ஜனதா ஆட்சியும், அ.தி.மு.க. ஆட்சியும் அகற்றப்பட வேண்டும். அதற்கு வேட்பாளர் சுப்பராயனுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் பாரதீய ஜனதா மிகப்பெரிய சக்தியாக உருவாகும் திருச்சியில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி மிகப்பெரிய சக்தியாக உருவாகும் என்று தமிழிசை சவுந்தரராஜன் திருச்சியில் கூறினார்.
2. பதவி விலகாவிட்டால் கர்நாடக சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பாஜக முடிவு
பதவி விலகாவிட்டால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கர்நாடக பாஜக முடிவு எடுத்துள்ளது.
3. காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி பாத யாத்திரை செல்லுங்கள் பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு
மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோரது பிறந்தநாளையொட்டி பாத யாத்திரை செல்லுமாறு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
4. கட்சியை விட்டு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் யாரும் விலக மாட்டார்கள்; எடியூரப்பா பேட்டி
பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள் என்று எடியூரப்பா கூறினார்.
5. மக்கள் ஆதரவு பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் என்ற பயந்து மத்திய அரசின் திட்டங்களை இருட்டடிப்பு செய்கிறது; காங்கிரஸ் அரசு மீது சாமிநாதன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தினால் மக்கள் ஆதரவு பா.ஜனதாவுக்கு கிடைத்துவிடும் என்று பயந்துபோய் மத்திய அரசின் திட்டங்களை புதுச்சேரி காங்கிரஸ் அரசு இருட்டடிப்பு செய்கிறது என்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.