திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த கலெக்டர்


திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த கலெக்டர்
x
தினத்தந்தி 15 April 2019 4:15 AM IST (Updated: 15 April 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தினை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார்.

திருப்பூர்,

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1704 வாக்குச்சாவடி மையங்களில் பதிவாகும் வாக்குகள் திருப்பூர் பல்லடம் சாலை எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரியில் எண்ணப்பட உள்ளது.

இதற்கான முன்னேற்பாடு பணிகள் பொதுப்பணித்துறை, போலீஸ், வருவாய்துறை மற்றும் உள்ளாட்சித்துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனைத்தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார். மேலும், வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் பாதுகாத்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை தினத்தன்று மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரமேஷ் குமார், உதவி திட்ட அலுவலர் கிரி, தேர்தல் தாசில்தார் முருகதாஸ், திருப்பூர் தெற்கு தாசில்தார் மகேஷ்வரன், பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story