மயிலாடுதுறையில் தி.மு.க. வேட்பாளர் ராமலிங்கம் வாக்குசேகரிப்பு


மயிலாடுதுறையில் தி.மு.க. வேட்பாளர் ராமலிங்கம் வாக்குசேகரிப்பு
x
தினத்தந்தி 14 April 2019 10:30 PM GMT (Updated: 14 April 2019 7:42 PM GMT)

மயிலாடுதுறையில் தி.மு.க. வேட்பாளர் ராமலிங்கம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

திருவிடைமருதூர்,

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராமலிங்கம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று காலை மயிலாடுதுறை புனித சேவியர் ஆலயத்தில் வாக்கு சேகரித்தார். அங்கு வந்த அனைவரிடமும் தனக்கு வாக்களித்தால் மயிலாடுதுறை தொகுதியை மேம்பாடு அடைய செய்வேன் என உறுதியளித்தார். தொடர்ந்து பேசிய வேட்பாளர் ராமலிங்கம்,

காவிரி டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்வேன். மானியத்துடன் கூடிய விதைகள், உரங்கள், இடுபொருட்கள், பூச்சிகொல்லி மருந்துகள் உள்ளிட்டவைகளை அரசே வழங்கிட முயற்சி செய்வேன்.

100 நாள் வேலை திட்டத்தின் கீழ்பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தேவையான கருவிகள் இலவசமாக வழங்கப்படும். ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு வழங்கப்படும். தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் குடிநீர் வழங்க கூட்டு குடிநீர் தொகுப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும். காவிரி டெல்டா பகுதியான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வேளாண்மையை பாதுகாக்க மீத்தேன் திட்டத்தை உடனடியாக கைவிடுமாறு வலியுறுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நாகை மாவட்ட பொறுப்பாளர் நிவேதாமுருகன், கும்பகோணம் அன்பழகன் எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story