மாவட்ட செய்திகள்

நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார் + "||" + The Vigilante Vallayam Collector started with the decision to vote honestly

நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம் தஞ்சையில் நடந்தது. இதனை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்,

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க மாற்றுத்திறனாளிகள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-


தஞ்சை மாவட்டத்தில் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ள 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் இருசக்கரவாகனங்களிலும் மற்றும் பேரணியாகவும் சென்றனர். எனவே அனைவரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களித்து ஜனநாயக கடமையை செய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேரணியில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் ஓட்டு இந்தியர்களின் பெருமை, மாற்றுத்திறனாளியின் வாக்கு முதல்வாக்கு ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தி சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவீந்திரன், தஞ்சை மாவட்ட தேசிய பார்வையற்றோர் சம்மேளன பொதுச்செயலாளர் ராஜூ, தஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக்குழுவை சேர்ந்த செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அமைதி ஊர்வலம்
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புக்கு கண்டனம் தெரிவித்தும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தங்கச்சிமடத்தில் அமைதி ஊர்வலம் நடந்தது.
2. வர்த்தக நிறுவனங்களில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் தொழிலாளர் துறை சார்பில் நடந்தது
வர்த்தக நிறுவனங்களில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம், தொழிலாளர் துறை சார்பில் நடந்தது.
3. தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்
மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
4. சமரச மையத்தில் வழக்குதரப்பினர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டாம் மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு
சமரச மையத்தில் வழக்குதரப்பினர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதி விஜயகாந்த் கூறினார்.
5. 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி ஸ்கேட்டிங் மூலம் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொண்டனர். தஞ்சையில் 4 கி.மீ. தூரம் இந்த நிகழ்ச்சி நடந்தது.