மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் ரூ.6 லட்சம் பணம், பொருட்கள் பறிமுதல் + "||" + Vehicle testing Rs 6 lakh cash, goods confiscation

வாகன சோதனையில் ரூ.6 லட்சம் பணம், பொருட்கள் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.6 லட்சம் பணம், பொருட்கள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகன சோதனையில் ரூ.6 லட்சம் பணம்,பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விதிமுறைகளின்படி மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு விதிகளை மீறி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.

இந்த வகையில் மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.5 லட்சத்து 71 ஆயிரத்து 650 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.38,705 மதிப்பிலான நோட்டீசுகள், டீ–சர்ட்டுகள், கொடிகள் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வாறு சோதனையில் ரூ.6 லட்சத்து 10 ஆயிரத்து 305 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் போதைப்பொருள் பறிமுதல் பயணி கைது
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு கடத்தப்பட இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பயணியை கைது செய்தனர்.
2. திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு விமானத்தில் கடத்த இருந்த ரூ.4 லட்சம் பறிமுதல்
திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு விமானத்தில் கடத்த இருந்த ரூ.4 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
3. திருச்சி விமான நிலையத்தில் ரூ.5½ லட்சம் தங்க சங்கிலிகள் பறிமுதல்
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் சிலர் தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் போன்றவற்றை கடத்தி வரும் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகமாக நடந்து வருகிறது.
4. காரைக்கால் அருகே வயலில் கிடந்த 4,600 லிட்டர் சாராயம் பறிமுதல் போலீசார் விசாரணை
காரைக்கால் அருகே வயலில் கிடந்த 4,600 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. திருச்சி விமான நிலையத்தில் 25 பவுன் தங்க தகடு பறிமுதல் சென்னை வாலிபரிடம் விசாரணை
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு மலிண்டோ விமானம் வந்தது.