மாவட்ட செய்திகள்

தமிழ்ப்புத்தாண்டையொட்டிநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்திரளான பக்தர்கள் சாமி தரிசனம் + "||" + Namakkal Anjaneya special abishekam Many devotees worship the Sami

தமிழ்ப்புத்தாண்டையொட்டிநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தமிழ்ப்புத்தாண்டையொட்டிநாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தமிழ்ப்புத்தாண்டையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
நாமக்கல், 

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

தமிழ்ப்புத்தாண்டையொட்டி நேற்று அதிகாலை நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடை மாலை சாத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து சாமிக்கு எண்ணெய், பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நாமக்கல் மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.