கார் மோதி இறைச்சி கடைக்காரர் பலி


கார் மோதி இறைச்சி கடைக்காரர் பலி
x
தினத்தந்தி 15 April 2019 4:00 AM IST (Updated: 15 April 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

மோகனூரில் கார் மோதி இறைச்சி கடைக்காரர் பலியானார்.

மோகனூர், 

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வடுகர் தெருவை சேர்ந்த அமாவாசை என்பவரது மகன் செந்தில் (வயது 35). இவர் மோகனூரில் இருந்து வளையபட்டி செல்லும் ரோட்டில் பன்றி இறைச்சி கடை நடத்தி வந்தார். நேற்று மோகனூரில் இருந்து மண்மங்கலம் செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் காவிரி ஆற்று பாலம் அருகே சென்று கொண்டு இருந்தார்.

அப்போது கரூரில் இருந்து மோகனூர் நோக்கி வந்த கார், இவர் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி மஞ்சுளா (28) கொடுத்த புகாரின் பேரில் மோகனூர் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காரை ஓட்டி வந்த கரூர் காந்திநகரைச் சேர்ந்த ஆசாத் (54) என்பவரும் காயம் அடைந்தார். அவர் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story