மாவட்ட செய்திகள்

கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது; புதுவையில் விசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் செல்லாது + "||" + Fishing barrier on the east coast Starting from midnight today; In pondichery Boats do not go deep into the sea

கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது; புதுவையில் விசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் செல்லாது

கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது; புதுவையில் விசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் செல்லாது
கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் தொடங்குகிறது. புதுவையில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் செல்லாது.
புதுச்சேரி,

மீன்களின் இனவிருத்திக்காக மத்திய-மாநில அரசுகள் மீன்பிடி தடைகாலம் ஒன்றை நிர்ணயம் செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் மீன்பிடி தடைகாலம் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் தொடங்குகிறது.


கிழக்கு கடற்கரை பகுதிகளில் தடைகாலம் முடிந்த 15 நாட்களில் மேற்கு கடற்கரை பகுதிகளான கேரளா, கர்நாடகம், கோவா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வரும்.

கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 591 மீன்பிடி கிராமங்களுக்கும், புதுச்சேரி, காரைக்கால் பகுதி மீனவர்களுக்கும் இந்த தடைகாலம் பொருந்தும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மீன்பிடி தடைகாலம் என்பது 45 நாட்களுக்கு இருந்தது. ஆனால் சில ஆண்டுகளாக அதை 60 நாட்களாக உயர்த்தி மத்திய-மாநில அரசுகள் நிர்ணயித்தது. அதன்படி, இன்று நள்ளிரவு தொடங்கும் மீன்பிடி தடைகாலம் வருகிற ஜூன் மாதம் 15-ந் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும்.

மீன்பிடி தடைகாலம் நாட்களில் மீனவர்கள் விசைப்படகுகளில் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லமாட்டார்கள். மாறாக 20 குதிரை திறனுக்கும் குறைவான கண்ணாடி இழை (பைபர்) படகுகளின் மூலம் குறைந்த தூரத்துக்கு சென்று சிறிய அளவிலான மீன்களை பிடித்து வருவார்கள். மீன்பிடி தடைகாலத்தால் இனி வரக்கூடிய நாட்களில் மீன்களின் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அக்டோபர் முதல் டிசம்பர் மாத காலங்களில் மீன்பிடி தடைகாலத்தை வைத்தால் நன்றாக இருக்கும் என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

புதுவையிலும் மீன்பிடி தடைக்காலம் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று இரவு முதல் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் அந்தந்த மீனவ கிராமங்களில் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

புதுவையில் வீராம்பட்டினம், தேங்காய் திட்டு, வைத்திக்குப்பம் உள்பட 18 மீனவ கிராமங்கள் உள்ளன. மீன்பிடி தடைக்காலம் தொடங்கி இருப்பதையொட்டி மீன்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஏரிகளில் பிடிக்கப்பட்ட மீன்களின் விற்பனை இன்று (திங்கட்கிழமை) முதல் சூடு பிடிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

1. மின்தடையை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
மின்தடையை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
2. புதுவையில் தடைக்காலம் அமல்: வரத்துக்குறைவால் மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு
தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் வரத்து குறைந்து மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
3. தனுஷ்கோடியில் தடையை மீறி ஆபத்தில் சிக்கும் சுற்றுலா பயணிகள்
தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகள் தடையை மீறி ஆபத்தில் சிக்கி வருகின்றனர்.
4. மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது: மல்லிப்பட்டினம் மீன்பிடிதுறைமுகம் வெறிச்சோடியது
மீன்பிடி தடைக்காலம் தொடங்கி உள்ளதால் மல்லிப்பட்டினம் மீன்பிடிதுறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
5. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவம் பாதுகாப்பு; வாக்குப்பதிவை முன்னிட்டு புதுச்சேரியில் 144 தடை, உடனடியாக அமலுக்கு வந்தது
புதுவையில் வாக்குப்பதிவினை அமைதியாக நடத்தும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடனே இது அமலுக்கு வந்துள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.