மாவட்ட செய்திகள்

கண்டமங்கலம் அருகே ரெயில் தண்டவாளம் அருகே பிணம்: வாலிபர் சாவில் மர்மம் இருப்பதாக தாய் புகார் உறவினர்கள் திடீர் மறியல் + "||" + Dead near Railroad: The mystery of the youth death Mother complained Stir from relatives

கண்டமங்கலம் அருகே ரெயில் தண்டவாளம் அருகே பிணம்: வாலிபர் சாவில் மர்மம் இருப்பதாக தாய் புகார் உறவினர்கள் திடீர் மறியல்

கண்டமங்கலம் அருகே ரெயில் தண்டவாளம் அருகே பிணம்: வாலிபர் சாவில் மர்மம் இருப்பதாக தாய் புகார் உறவினர்கள் திடீர் மறியல்
கண்டமங்கலம் அருகே ரெயில் தண்டவாளம் அருகே வாலிபர் பிணமாக கிடந்தது குறித்து மனைவி, மாமியார் மீது அவரது தாயார் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசாரை கண்டித்து உறவினர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கண்டமங்கலம்,

கண்டமங்கலத்தை அடுத்த பள்ளி நேலியனூர் ரெயில்வே கேட் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பிணமாக கிடந்தவர் பள்ளிபுதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜ்கிரண் (வயது 25), புதுச்சேரி கல்மண்டபத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலைபார்த்து வந்தவர் என்பதும் தெரியவந்தது.

அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் மருமகள் சசி என்ற கஸ்தூரி, மாமியார் ஆகியோர் தான் காரணம் என்றும் ராஜ்கிரண் தாயார் வாசுகி கண்டமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் முண்டியப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ராஜ்கிரண் உடல் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மதியம் அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல் அடக்க செய்யப்பட்டது.

ராஜ்கிரண் இறந்த தொடர்பாக புகார் அளித்து கண்டமங்கலம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்கிரண் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போலீசாரை கண்டித்து மண்டகப்பட்டு ஏரிபாக்கம் ரோடு பள்ளிபுதுப்பட்டு பஸ் நிறுத்ததில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது போலீசார் ராஜ்கிரண் இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. பெரம்பலூரில் வீடியோ எடுத்து பெண்களுக்கு பாலியல் தொல்லை பாதிக்கப்பட்ட பெண் பேசிய ஆடியோ வெளியானதால் பரபரப்பு
பெரம்பலூரில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வீடியோ எடுத்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் பேசிய ஆடியோ நேற்று வெளியானது. பொள்ளாச்சியை போல பெரம்பலூரில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2. பொன்னமராவதி சம்பவம்; குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பெண்கள் துடைப்பத்துடன் பஸ் மறியல்
பொன்னமராவதி சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பெண்கள் துடைப்பத்துடன் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.
3. நெட்டப்பாக்கத்தில் சிகிச்சைக்கு வந்த ஆண் குழந்தை திடீர் சாவு; ஆம்புலன்ஸ் டிரைவர், ஊழியர்கள் மீது உறவினர்கள் புகார் - மறியல்
நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு கொண்டுவரப்பட்ட 2 வயது ஆண் குழந்தை திடீரென இறந்தது. ஆம்புலன்ஸ் டிரைவர், ஊழியர்களின் அலட்சியம்தான் இதற்கு காரணம் என புகார் தெரிவித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
4. அறைகளில் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு: மதுரை சிறையில் கைதிகள் - போலீசார் மோதல், கல்வீச்சு- தற்கொலை மிரட்டலால் பரபரப்பு
கைதிகள் அறைகளில் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அப்போது கற்கள் வீசப்பட்டன. கைதிகளின் தற்கொலை மிரட்டலாலும் பரபரப்பு உருவானது.
5. ஈரோடு மோசிக்கீரனார் வீதியில் வீடுகளில் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடந்ததால் பரபரப்பு
ஈரோடு மோசிக்கீரனார் வீதியில் உள்ள வீடுகளில் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். அவர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.