மாவட்ட செய்திகள்

தினகரனை நம்பி போட்டியிடுபவர்கள் பலிகடா தான் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி + "||" + dead goat Those who contend for the dinakaran - Minister RP Udaiyakumar interviewed

தினகரனை நம்பி போட்டியிடுபவர்கள் பலிகடா தான் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

தினகரனை நம்பி போட்டியிடுபவர்கள் பலிகடா தான் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
தினகரனை நம்பி போட்டியிடுபவர்கள் பலிகடா தான் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை,

விருதுநகர் நாடாளுமன்ற தே.மு.தி.க.வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

காங்கிரஸ் கட்சியால் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல. நாட்டுக்கும் எந்த நலனும் ஏற்பட வில்லை. கடந்த 2009–ம் ஆண்டு இந்த தொகுதியில் வெற்றி பெற்ற மாணிக்க தாகூர் ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

தினகரன் அணியில் விருதுநகரில் போட்டியிட யாரும் முன்வரவில்லை. எனவே அவர், நெல்லையில் இருந்து போட்டியிட ஒருவரை அழைத்து வந்துள்ளனர். இவர் மட்டுமல்ல தினகரனை நம்பி போட்டியிடுபவர்கள் அனைவரும் பலிகடா ஆக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அரசின் நலத்திட்டங்களுக்கு எல்லாம் ஸ்டாலின் முட்டுக்கட்டை போடுகிறார். அவரது தூண்டுதலால் தமிழகத்தில் 35 ஆயிரம் போராட்டங்கள் நடந்துள்ளன. ஆனால் இவற்றை எல்லாம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவிடு பொடியாக்கி விட்டார். ஸ்டாலினால் அரசை குறை கூற முடியவில்லை. அதனால் தனி நபர் விமர்சனம் செய்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும்.


தொடர்புடைய செய்திகள்

1. 1,121 பேருக்கு நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்
திருமங்கலம், டி.கல்லுப்பட்டி பகுதிகளில் நடந்த விழாவில் 1,121 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
2. ‘‘நாடாளுமன்றத்தில் வைகோ பேச்சை ஆதரிக்கிறோம்’’ அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி
நாடாளுமன்ற மாநிலங்களவையில் வைகோவில் பேச்சை ஆதரிக்கிறோம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.
3. கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு; நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்
கொடுமுடி அருகே நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
4. திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் – வேன் மோதல்; தனியார் நிறுவன பொதுமேலாளர் பலி
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்– வேன் மோதிய விபத்தில் தனியார் நிறுவன பொதுமேலாளர் பலியானார்.
5. ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தை கைவிடக்கோரி டெல்லியில் தமிழக விவசாயிகள் உண்ணாவிரதம்
‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தை கைவிடக்கோரி தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுவை முதல்–அமைச்சர் ஆதரவு தெரிவித்தார்.