வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு


வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 15 April 2019 4:00 AM IST (Updated: 15 April 2019 2:42 AM IST)
t-max-icont-min-icon

வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் சிவராசு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி,

திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையம் பஞ்சப்பூர் சாரநாதன் என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. 18-ந்தேதி வாக்குப்பதிவு முடிந்ததும் திருச்சி தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்படும். மே 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் அறையில் வெப் கேமராக்கள் பொருத்தும் பணி, வாக்கு எண்ணும் அறைகளில் இரும்பு கம்பிகளால் ஆன வலை பொருத்தும் பணி உள்ளிட்டவை நடந்து வருகிறது. இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் சிவராசு நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அவர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்பரசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாகராஜன்(சத்துணவு) ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story