மாவட்ட செய்திகள்

புவனகிரி பகுதியில், திருமாவளவன் வாக்குசேகரிப்பு + "||" + In the Bhuvanagiri area, Thirumavalavan Voting Collection

புவனகிரி பகுதியில், திருமாவளவன் வாக்குசேகரிப்பு

புவனகிரி பகுதியில், திருமாவளவன் வாக்குசேகரிப்பு
புவனகிரி பகுதியில் திருமாவளவன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
புவனகிரி,

சிதம்பரம் (தனி)நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று திருமாவளவன் புவனகிரி ஒன்றியத்தில் உள்ள பூதவராயன்பேட்டை, பூமணவெளி, ஆலம்பாடி, கிருஷ்ணாபுரம், மருதூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திறந்தவெளி வாகனத்தில் வீதிவீதியாக சென்று தனக்கு பானை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் துண்டுபிரசுரங்களையும் வழங்கினார். ஆதிவராகநத்தம் பகுதியில் வாக்குசேகரிக்கும் போது ஒரு பெண் குழந்தைக்கு அறிவுமொழி என்றும் மற்றொரு பெண் குழந்தைக்கு அறிவுக்கரசி என்றும் திருமாவளவன் பெயர் சூட்டினார். வாக்கு சேகரிப்பின் போது புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் துரை.கி. சரவணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகர், நகர செயலாளர் கந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லப்பன்,ஒன்றிய செயலாளர் செந்தில், ம.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ரவி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வட்டார தலைவர் சவுந்திரபாண்டியன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

முன்னதாக அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி புவனகிரி பாலம் எதிரில் உள்ள அவரது சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்


தொடர்புடைய செய்திகள்

1. ரஜினிகாந்திடம் இருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது - திருமாவளவன்
ரஜினிகாந்திடம் இருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது என்று தொல். திருமாவளவன் எம்.பி., தெரிவித்துள்ளார்.
2. தேசிய கல்வி கொள்கைக்கான அறிக்கையில் பல இடங்களில் கண்ணிவெடிகளை மத்திய அரசு புதைத்து வைத்துள்ளது - தொல்.திருமாவளவன் பேச்சு
தேசிய கல்வி கொள்கைக்கான அறிக்கையில் பல இடங்களில் கண்ணிவெடிகளை மத்திய அரசு புதைத்துள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார்.
3. நீட் தேர்வு பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் திருமாவளவன் பேட்டி
நீட் தேர்வு பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் திருமாவளவன் பேட்டி.
4. தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை - தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
5. கூட்டணி விவகாரம்: மு.க.ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன் - திருமாவளவன்
கூட்டணி விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன் என்று திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளார்.