தூத்துக்குடியில், அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


தூத்துக்குடியில், அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 15 April 2019 4:15 AM IST (Updated: 15 April 2019 4:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி,

சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சார்பில் அம்பேத்கர் சிலைக்கு ஜெயக்கொடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தமிழ்செல்வன், மிக்கேல்குரூஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு தூத்துக்குடி தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் புவனேசுவரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட செயலாளர்கள் ஹென்றி தாமஸ் (தெற்கு), சுந்தரராஜ் (வடக்கு), மகளிர் அணி அந்தோணி கிரேஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநகர செயலாளர் ராஜா, சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மத்திய மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் வில்சன், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் அற்புதராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆதித்தமிழர் கட்சி சார்பில் தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்வேலன் தலைமை தாங்கினார். துணை பொதுச் செயலாளர் கண்ணன், தென்மண்டல செயலாளர் மனோகர், மாநில இளைஞர் அணி செயலாளர் சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story