தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உதவி என்ஜினீயர் வேலை 224 காலியிடங்கள்


தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உதவி என்ஜினீயர் வேலை 224 காலியிடங்கள்
x
தினத்தந்தி 15 April 2019 11:02 AM GMT (Updated: 15 April 2019 11:02 AM GMT)

தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் உதவி என்ஜினீயர், சுற்றுச்சூழல் என்ஜினீயர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 224 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB), சுற்றுச்சூழல் பற்றிய பல்வேறு ஆய்வுகளிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் பங்களிப்பு செய்கிறது. புதிய நிறுவனங்கள், திட்டங்களை செயல்படுத்தும்போது சுற்றுச்சூழலில் தாக்கம் ஏற்படுமா? என்பதை இந்த அமைப்பு ஆய்வு செய்கிறது. அதற்கான சான்றிதழையும் வழங்குகிறது.

தற்போது இந்த நிறுவனத்தில் உதவி என்ஜினீயர், சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர், உதவியாளர், தட்டச்சர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 224 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணி வாரியான காலியிட விவரம் : உதவி என்ஜினீயர் - 73, ஆராய்ச்சியாளர் - 60, உதவியாளர் - 36, டைப்பிஸ்ட் - 55

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

இந்த பணிகளுக்கு 1-1-2018-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். 30 வயதுக்கு உட்பட்டவர்கள் உதவி என்ஜினீயர் மற்றும் ஆராய்ச்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். உதவியாளர் மற்றும் டைப்பிஸ்ட் பணிக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி

வேதியியல், உயிரியல், சுற்றுச்சூழல் சார்ந்த அறிவியல் படிப்புகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் ஆராய்ச்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். எம்.இ., எம்.டெக் படித்தவர்கள் உதவி என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதர பட்டதாரிகள் உதவியாளர் பணிகளுக்கும், பட்டப்படிப்புடன் உயர்நிலை தட்டச்சு சான்றிதழ் பெற்றவர்கள் டைப்பிஸ்ட் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

ஓ.சி., பி.சி., எம்.பி.சி., டி.என்.சி. பிரிவினர் ரூ.500-ம், எஸ்.சி., எஸ்.சி.(ஏ.), எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகள், விதவைப் பெண்கள் ரூ.250-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற 23-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tnpcb.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

Next Story