காது கேளாதவர்களுக்கான அப்ளிகேசன்


காது கேளாதவர்களுக்கான அப்ளிகேசன்
x
தினத்தந்தி 15 April 2019 12:15 PM GMT (Updated: 15 April 2019 12:15 PM GMT)

‘எல் அண்ட் டி’ என அழைக்கப்படும் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம், காது கேளாதவர்களுக்கான சிறப்பு அப்ளிகேசனை உருவாக்கி உள்ளது.

இந்திய சைகை மொழி (DEF-ISL) என்ற பெயரில் இதற்கான அப்ளிகேசனை அவர்கள் வெளியிட்டு உள்ளனர். இது சைகை மொழிகளை எளிதாக புரிந்து கொள்ளவும், ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளவும், பயன்படுத்தவும் உதவுகிறது. இதில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான சைகைகளும், அதற்கான சொற்றொடர்களும் வீடியோ காட்சிகளாகவும், கிராபிக் படக்காட்சிகளாகவும் இணைக்கப்பட்டுள்ளன. காது கேளாதவர் மட்டுமல்லாது அவர்களுடன் தொடர்பு கொள்ள விரும்பும் மற்றவர்களுக்கும் இந்த அப்ளிகேசன் பயனுள்ளதாக இருக்கும்.

Next Story