மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்களின் மகத்தான ஆதரவு உள்ளது ஜி.கே.வாசன் பேச்சு + "||" + Digg The coalition has massive support for the people of GK Vasan's speech

அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்களின் மகத்தான ஆதரவு உள்ளது ஜி.கே.வாசன் பேச்சு

அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்களின் மகத்தான ஆதரவு உள்ளது ஜி.கே.வாசன் பேச்சு
அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்களின் மகத்தான ஆதரவு உள்ளது என ஜி.கே.வாசன் கூறினார்.
பட்டுக்கோட்டை,

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.நடராஜனை ஆதரித்து பட்டுக்கோட்டையில் நேற்று முன்தினம் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். இதையொட்டி பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே பிரசார கூட்டம் இரவு நடந்தது. கூட்டத்துக்கு தஞ்சை தெற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் என்.ஆர்.ரெங்கராஜன் தலைமை தாங்கினார். வேட்பாளர் என்.ஆர்.நடராஜன், பட்டுக்கோட்டை சி.வி.சேகர் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–


நான் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்து விட்டேன். இது 100–வது கூட்டமாகும். இதுவரை நான் சென்ற கூட்டங்களில் இருந்து மக்களின் மகத்தான ஆதரவு அ.தி.மு.க. கூட்டணிக்கு உள்ளது என்பதை அறிந்து கொண்டேன்.

தமிழகத்தின் மிக முக்கியமான தொகுதிகளில் தஞ்சாவூர் தொகுதியும் ஒன்று. காரணம் தமிழகம் என்றாலே காவிரி பிரச்சினை. காவிரி பிரச்சினை என்றாலே தஞ்சாவூர் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.


தஞ்சை தொகுதி வாக்காளர்கள் மாறி, மாறி ஒருவருக்கே வாக்களித்து ஏமாற மாட்டார்கள். பாரம்பரியமிக்க குடும்ப வேட்பாளரான என்.ஆர்.நடராஜனை வெற்றி பெறச்செய்யுங்கள். அவரை தேர்ந்தெடுத்தால் தன்னுடைய தொகுதிக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுவார். அவர் எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர்.

பா.ஜனதா தலைமையிலான ஆட்சியில் இந்தியா இதுவரை காணாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி பெற்று இருக்கிறது. அதேபோல தமிழ்நாட்டில் முதல்–அமைச்சர், துணை முதல் அமைச்சர், மக்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நரேந்திரமோடி காவலாளி அல்ல சர்வாதிகாரி சீர்காழியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
நரேந்திரமோடி காவலாளி அல்ல சர்வாதிகாரி என்று சீர்காழியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
2. மோடி, எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்புவோம் திருவாரூர், நாகை தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
மோடி, எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று திருவாரூர், நாகை தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
3. தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்தும் நிறைவேற்றப்படும் ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று திருவாரூரில் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்த மு.க.ஸ்டாலின் கூறினார்.
4. அ.தி.மு.க., த.மா.கா. வெற்றியை தடுக்க சதி ஜி.கே.வாசன் பரபரப்பு பேச்சு
அ.தி.மு.க., த.மா.கா.வின் வெற்றியை தடுக்க சதி என்று தஞ்சையில் ஜி.கே.வாசன் பரபரப்பாக பேசினார்.
5. மோடி வித்தைக்கு இளைஞர்கள் மயங்கிவிடக்கூடாது தஞ்சையில், கி.வீரமணி பேச்சு
மோடி வித்தைக்கு இளைஞர்கள் மயங்கிவிடக்கூடாது என தஞ்சையில் கி.வீரமணி கூறினார்.