மாவட்ட செய்திகள்

ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் கிரிவலப்பாதையில் செல்லாமல் மாற்றுப்பாதையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்படும் போலீஸ் சூப்பிரண்டு தகவல் + "||" + After the completion of the polls Voting machines will be taken on the transit route Police Superintendent Information

ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் கிரிவலப்பாதையில் செல்லாமல் மாற்றுப்பாதையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்படும் போலீஸ் சூப்பிரண்டு தகவல்

ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் கிரிவலப்பாதையில் செல்லாமல் மாற்றுப்பாதையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்படும் போலீஸ் சூப்பிரண்டு தகவல்
தேர்தலன்று சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடைபெறுவதால் ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் வாக்குகள் எண்ணும் மையங்களுக்கு மின்னணு எந்திரங்கள் கிரிவலப்பாதையில் செல்லாமல் மாற்றுப்பாதையில் கொண்டு செல்லப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

திருவண்ணாமலை, தேர்தலன்று சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடைபெறுவதால் ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் வாக்குகள் எண்ணும் மையங்களுக்கு மின்னணு எந்திரங்கள் கிரிவலப்பாதையில் செல்லாமல் மாற்றுப்பாதையில் கொண்டு செல்லப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, அவரது அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 18–ந் தேதியன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் அமைதியாகவும் நடத்துவதை உறுதி செய்யும் வகையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,288 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 2 ஆயிரத்து 372 வாக்குச்சாவடிகள் உள்ளன.

ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு போலீஸ் அல்லது ஒரு சிறப்பு போலீஸ் வீதம் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 93 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது. இந்த மையங்களுக்கு 4 மத்திய பாதுகாப்பு படையினருடன் கூடிய பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. 192 நடமாடும் போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் நிலையில் உள்ள உயர் அதிகாரிகள் பொறுப்பில் 52 அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த போலீசார், வெளி மாவட்ட சிறப்பு போலீசார் மத்திய பாதுகாப்பு படையினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், பயிற்சி துணை கண்காணிப்பாளர்கள், பயிற்சி போலீசார் வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், ஓய்வு பெற்ற போலீசார், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படையினர் என 6 ஆயிரத்து 201 பாதுகாப்பு படையினர் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தபட உள்ளனர்.

தேர்தல் நேரத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்று கருதி சுமார் 184 ரவுடிகள் கண்டறியப்பட்டு அவர்களை கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தி சுமார் 6 மாத காலம் அமைதியை பேணுவதற்கான நன்னடத்தைக்கான பத்திரம் எழுதி வாங்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் யாரேனும் பொதுமக்களை மிரட்டியோ அல்லது வேறு ஏதேனும் சட்ட விரோத செயல்களின் மூலமாக ஒரு கட்சிக்கோ அல்லது தனிப்பட்ட ஒரு நபருக்கோ வாக்களிக்க கட்டாயப்படுத்துதல் குறித்தும் மற்றும் தேர்தல் சம்பந்தப்பட்ட மற்ற பிரச்சினைகள் குறித்து ஏதாவது தகவல் அளிக்க விரும்பினால் 04175– 233234, 233633 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

நாடாளுமன்ற தேர்தலன்று இரவு 7.05 மணிக்கு சித்ரா பவுர்ணமி தொடங்கி மறுநாள் 19–ந் தேதி மாலை 5.35 மணிக்கு நிறைவு பெறுகிறது. சித்ரா பவுர்ணமியன்று 7 லட்சம் பேர் கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிரிவலப்பாதையில் மற்றும் திருவண்ணாமலை நகரில் 14 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு மின்னணு எந்திரங்கள் கிரிவலப் பாதையில் செல்லாமல் மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் வனிதா, ஞானசேகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, குமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. குழந்தை விற்பனை ஆடியோ சர்ச்சை தொடர்பாக முதற்கட்ட விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு
குழந்தை விற்பனை ஆடியோ சர்ச்சை தொடர்பாக முதற்கட்ட விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
2. வாகன சோதனையை போலீஸ் ஜ.ஜி. ஆய்வு
பெரம்பலூர், சிதம்பரம், கரூர், திருச்சி ஆகிய 4 நாடாளுமன்ற தொகுதியின் போலீஸ் மேற்பார்வையாளரான ஐ.ஜி. தேவராஜ் ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
3. தேர்தல் பணி குறித்து போலீசார் ஆலோசனை: அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை
அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.ஜி.சுரேந்தர் சிங் யாதவ் எச்சரிக்கை விடுத்தார்.
4. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் போலீஸ் அணிவகுப்பு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் போலீஸ் அணிவிப்பு நடைபெற்றது.
5. இடிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் சிவகாசி டவுன் போலீஸ் நிலைய கட்டுமானப்பணி தொடங்கப்படாத நிலை
சிவகாசி டவுன் போலீஸ் நிலைய கட்டிடம் இடிக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்படவில்லை.