மாவட்ட செய்திகள்

செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர் சாவு + "||" + The young man who fell down from the cellphone tower

செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர் சாவு

செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர் சாவு
மங்களமேட்டை அடுத்துள்ள அகரம்சீகூர்- செந்துறை சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
மங்களமேடு,

மங்களமேட்டை அடுத்துள்ள அகரம்சீகூர்- செந்துறை சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டம் வட்டம் மேலபூவாணி கிராமத்தை சேர்ந்த மோகன் மகன் மாடசாமி(வயது 27) என்பவர் செல்போன் கோபுரத்தின் மேல் பணிபுரிந்துகொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. சிங்கப்பெருமாள் கோவில் அருகே வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது
சிங்கப்பெருமாள் கோவில் அருகே வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. தஞ்சை அருகே வாய்க்காலில் மினி லாரி கவிழ்ந்து வாலிபர் சாவு 3 பேர் படுகாயம்
தஞ்சை அருகே வாய்க்காலில் மினி லாரி கவிழ்ந்ததில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
4. கும்பகோணம் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் சாவு திருமண விழாவுக்கு பேனர் கட்டியபோது பரிதாபம்
கும்பகோணம் அருகே திருமண விழாவுக்கு பேனர் கட்டியபோது மின்சாரம் தாக்கியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
5. கரூரில் கிணற்றில் தவறி விழுந்த 9-ம்வகுப்பு மாணவர் சாவு
கரூரில் கிணற்றில் தவறி விழுந்த 9-ம்வகுப்பு மாணவர் சாவு நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்ற போது பரிதாபம்.