மாவட்ட செய்திகள்

அரண்மனைகுறிச்சி தில்லை காளியம்மன் கோவிலில் பூகாசு வழங்கும் விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் + "||" + Bhakasu celebrations were attended by a large number of devotees participated in the palace Kaliamman Temple

அரண்மனைகுறிச்சி தில்லை காளியம்மன் கோவிலில் பூகாசு வழங்கும் விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

அரண்மனைகுறிச்சி தில்லை காளியம்மன் கோவிலில் பூகாசு வழங்கும் விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
அரண்மனைகுறிச்சி தில்லை காளியம்மன் கோவிலில் நடைபெற்ற பூகாசு வழங்கும் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் அரண்மனைகுறிச்சி கிராமத்தின் அருகே உள்ள தில்லை காளியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் தமிழ் வருடப்பிறப்பான சித்திரை 1-ம் நாளில் பூகாசு வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவானது கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தொன்றுதொட்டு நடத்தப்படுவதாகவும், இக்கோவிலின் அம்மனான தில்லை காளியம்மன் குமார் என்பவர் மீது இறங்கி பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இக்கோவிலுக்கு வந்து அருள் வாக்கு கேட்டால் கண்டிப்பாக நடைபெறும் என்பது ஐதீகம். இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர் கூட்டம் இக்கோவிலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் குழந்தை பாக்கியம் வேண்டும் என வேண்டிக்கொண்டு அதற்கு நேர்த்திக்கடனாக குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் எடைக்கு எடை சில்லரை காசுகளை கோவிலுக்கு காணிக்கையாக வழங்குவர். இதுபோன்று காணிக்கையாக வழங்கப்படும் காசுகளையும், கோவில் உண்டியலில் போடப்படும் காசுகளையும் எடுத்து ஆண்டுதோறும் சித்திரை 1-ம் நாள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கண்ணை கட்டிக்கொண்டு ஒரு பிடி சில்லறை காசுகளை வழங்குவர். அப்படி கொடுக்கப்படும் காசுகளை கொண்டு சென்று பூஜை செய்தால் வீட்டில் செல்வம் கூடும், நலம் வந்து சேரும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.


அதன்படி நேற்று முன்தினம் நடத்தப்பட்ட இவ்விழாவில் அம்மனுக்கு பால், பழம், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு பட்டு உடுத்தி சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கோவிலுக்கு வந்திருந்த ஊனமுற்றோர்களுக்கும், ஆதரவற்ற முதியோர்களுக்கும் வேட்டி- சேலை, துண்டு உள்ளிட்டவை தானமாக வழங்கப்பட்டது. பின்னர் கண்ணை கட்டிக் கொண்டு பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கி ஒரு பிடி சில்லறை காசுகளை பூசாரி வழங்கினார். இந்த பூகாசுகளை வாங்குவதற்காக தஞ்சை, திருச்சி, மதுரை, கோவை, பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்களினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்யவும், பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் திருமானூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் வேல்காவடி ஊர்வலம்
மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் வேல் காவடி ஊர்வலம் நேற்று புறப்பட்டு சென்றது.
2. தர்மபுரி கோவில்களில் ராகவேந்திர சாமி ஆராதனை விழா திரளான பக்தர்கள் தரிசனம்
தர்மபுரி கோவில்களில் ராகவேந்திர சாமி ஆராதனை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
3. திருவாரூரில் சுதந்திர தின விழா: 88 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
திருவாரூரில் நடந்த சுதந்திர தினவிழாவில் 88 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.
4. ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழாவிற்கான ஏற்பாடு தீவிரம்
புதுக்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழாவிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
5. புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் பேட்டி
புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்தார்.