மாவட்ட செய்திகள்

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயரிங் மாணவர் சாவு + "||" + The death of an engineer student who fell from the running train

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயரிங் மாணவர் சாவு

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயரிங் மாணவர் சாவு
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அம்பர்நாத்,

தானே மாவட்டம் பத்லாப்பூரை சேர்ந்தவர் சிவாஜி போகிர் (வயது22). இவர் பிவ்புரியில் உள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். நேற்று காலை தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு செல்ல ரெயிலில் பயணம் செய்தார்.

ரெயிலில் கூட்ட நெரிசல் மிகுதியாக இருந்ததால் அவர் வாசற்படியில் நின்ற படி பயணம் செய்தார்.

இந்தநிலையில், சேலு-நேரல் ரெயில் நிலையங்களுக்கிடைய வந்தபோது திடீரென அவர் கைப்பிடி நழுவி ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் ரெயில் சக்கரத்தில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்த கர்ஜத் ரெயில்வே போலீசார் அங்கு சென்று பலியான மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.