தூத்துக்குடியில் வாக்குப்பதிவுக்கான பொருட்களை தயார்படுத்தும் பணி தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி ஆய்வு


தூத்துக்குடியில் வாக்குப்பதிவுக்கான பொருட்களை தயார்படுத்தும் பணி தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி ஆய்வு
x
தினத்தந்தி 15 April 2019 9:45 PM GMT (Updated: 15 April 2019 8:22 PM GMT)

தூத்துக்குடியில் வாக்குப்பதிவுக்கான பொருட்களை தயார் நிலையில் வைக்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது. இதற்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர ஓட்டுப்பதிவுக்கு தேவையான அழியாத மை, 13 வகையான படிவங்கள், 25 வகையான கவர்கள், 6 வகையான போர்டுகள், பேனா, பென்சில், மெழுகுவர்த்தி உள்பட 107 வகையான பொருட்கள் தேர்தல் ஆணையத்தில் இருந்து பெறப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

இந்த பொருட்களை ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தனித்தனியாக பிரித்து அனுப்புவதற்கு தயார் நிலையில் வைக்கும் பணி நடந்து வருகிறது.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கான பொருட்களை தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து பிரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அனைத்து பொருட்களையும் பையில் வைத்து தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Next Story