தமிழக உரிமையை மீட்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை பேச்சு


தமிழக உரிமையை மீட்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை பேச்சு
x
தினத்தந்தி 16 April 2019 4:30 AM IST (Updated: 16 April 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

தமிழக உரிமையை மீட்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை கூறினார்.

க.பரமத்தி,

கரூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை, க.பரமத்தி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட தும்பிவாடி, ஆரியூர், தென்னிலை, கோடந்தூர், சின்னதாராபுரம், ராஜபுரம், எலவனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திறந்த வாகனத்தில் நின்றபடி மக்களிடையே வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஏழை, எளியோர் உலகத்தர சிகிச்சை பெற மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தான் பல்வேறு சாத்தியமான திட்டங்கள் கிடைக்கும். மாறாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காவிரியில் அணையை கட்டி நீர் தர மறுப்பார்கள்.

இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டது, 2-ஜி ஊழல், தமிழகத்தில் மின்வெட்டு உள்ளிட்டவை அரங்கேறியது எல்லாம் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது என்பதை மறந்து விடாதீர்கள். எனவே தமிழக உரிமையை மீட்கவும், திட்டங்களை முனைப்புடன் கேட்டு பெறவும் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்.

அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளரை (செந்தில்பாலாஜி), கடந்த 2016-ல் நாம் தான் ஜெயிக்க வைத்தோம். ஆனால் அவரது தவறான நிலைப்பாட்டினால் எம்.எல்.ஏ.வை நீங்கள் இழந்தீர்கள். எனவே மற்றொரு முறையும் இதே தவறை செய்யாமல் அரவக்குறிச்சி உள்பட இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

வாக்குசேகரிப்பின்போது, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story