மாவட்ட செய்திகள்

பேராசிரியை நிர்மலாதேவி 22–ந்தேதி ஆஜராக வேண்டும் -மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவு + "||" + Professor nirmaladevi Must be present on the 22nd - Madurai Court orders the judges

பேராசிரியை நிர்மலாதேவி 22–ந்தேதி ஆஜராக வேண்டும் -மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவு

பேராசிரியை நிர்மலாதேவி 22–ந்தேதி ஆஜராக வேண்டும் -மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவு
பேராசிரியை நிர்மலாதேவி வருகிற 22–ந் தேதி ஆஜராக வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் அந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள்.

இந்த விவகாரத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை, எனவே இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று கோரி இந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி சுகந்தி, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சுமார் ஒரு வருடம் சிறையில் இருந்த நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கி கடந்த மாதம் உத்தரவிட்டது. மேலும் நிர்மலாதேவி வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு விசாரிக்கவும் தடை விதித்தது.

இந்தநிலையில் மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் நேற்று வழக்குகளை விசாரித்தனர்.

அப்போது தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. நிர்மலாதேவிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கீழ்கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நிர்மலாதேவி பற்றிய செய்தி வார இதழில் எழுதப்பட்டு வருகிறது. எனவே நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்டு நிலுவையில் உள்ள வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்‘ என்று முறையிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், “ஏற்கனவே நிர்மலாதேவி நேரில் ஆஜராகி பல கேள்விகளுக்கு விளக்கம் அளித்து உள்ளார். அவரிடம் மேலும் பல சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்க வேண்டி உள்ளது. எனவே அவர் வருகிற 22–ந்தேதி (திங்கட்கிழமை) மதுரை ஐகோர்ட்டு டிவி‌ஷன் பெஞ்ச் நீதிபதிகள் தனி அறையில் நேரில் ஆஜராகும்படி அவரது வக்கீல் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்“ என உத்தரவிட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட 1½ வயது குழந்தை தாத்தாவிடம் ஒப்படைப்பு பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
மன்னார்குடியில் ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட 1½ வயது ஆண் குழந்தை அவரது தாத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
2. குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பதை தடுக்க கருக்கலைப்பை 24 வாரமாக நீட்டிக்கக்கோரி வழக்கு; மத்திய அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்
குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பதை தடுக்க கருக்கலைப்பை 24 வாரமாக நீட்டிக்கக்கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. சிறுவர்களின் வீடியோவை பதிவேற்றம் செய்தால் அவமதிப்பு வழக்கு: ‘டிக்-டாக்’ செயலிக்கான தடை நிபந்தனையுடன் நீக்கம், மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
‘டிக்-டாக்’ செயலிக்கு விதித்த தடையை நீக்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சிறுவர், சிறுமியர் பங்கேற்கும் வீடியோக்களை பதிவேற்றம் செய்தால் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
4. சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்- கலெக்டர் அருண் உத்தரவு
சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கலெக்டர் அருண் உத்தரவிட்டார்.
5. பாலின மாற்று அறுவை சிகிச்சையை தடை செய்ய அரசாணை பிறப்பிக்க வேண்டும்; சுகாதாரத்துறை செயலாளருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பாலின மாற்று அறுவை சிகிச்சையை தடை செய்ய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை