மாவட்ட செய்திகள்

அவினாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு + "||" + Break the house's lock and steal 10 pounds of jewels

அவினாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு

அவினாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு
அவினாசி அருகே தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர்.

அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் கருவலூர் காளிபாளையத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 61). இவர் அனுப்பர்பாளையத்தில் உள்ள பாத்திர பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 11–ந்தேதி தனது மனைவி சுபாராணியுடன் மயிலாடுதுறையில் உள்ள தனது உறவினர் வீட்டு விழாவிற்கு சென்றுவிட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறை ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தட்சிணாமூர்த்தி அவினாசி போலீசில் அளித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் திருட வந்த மர்ம ஆசாமிகள் வீட்டின் பூஜையறை சுவரில் இந்தியில் ஏதோ எழுதி விட்டு சென்றதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துணை போலீஸ் சூப்பிரண்டு பரமசாமி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சம்பங்கி தலைமையில் தனிப்படை அமைத்து சப்–இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் ஹரிகிருஷ்ணன், விஜய் கொண்ட குழுவினர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கடந்த 2018–ம் ஆண்டு தட்சிணாமூர்த்தி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 26 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் திருட்டுப்போனது. இதுகுறித்து அப்போது தட்சிணாமூர்த்தி அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். ஒரு வருடத்தில தட்சிணாமூர்த்தியின் வீட்டில் 2 முறை நடந்த திருட்டு சம்பவம் நடந்திருப்பது கருவலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கடுமையான விலை உயர்விலும் தங்கத்துக்கான இறக்குமதி வரியை குறைக்க முடியாது - நிர்மலா சீதாராமன் உறுதி
கடுமையான விலை உயர்விலும் தங்கத்துக்கான இறக்குமதி வரியை குறைக்க முடியாது என நிர்மலா சீதாராமன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
2. மன்னார்குடியில் பைனான்சியர் வீட்டில் திருடிய அக்காள்-தம்பி கைது
மன்னார்குடியில் பைனான்சியர் வீட்டில் திருடிய அக்காள்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
3. ஈரோட்டில் புத்தகக்கடை உரிமையாளர் வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை
ஈரோட்டில் புத்தகக்கடை உரிமையாளர் வீட்டில் 22 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. சேலத்தில் கைதான வடமாநில கும்பலிடம் 3½ கிலோ தங்கம், ரூ.13 லட்சம் பறிமுதல் கேரளாவில் நகைக்கடையில் கொள்ளையடித்தது அம்பலம்
சேலத்தில் கைதான வடமாநில கும்பலிடம் 3½ கிலோ தங்கம், ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் கேரளாவில் நகைக்கடையில் கொள்ளையடித்தது அம்பலமாகி உள்ளது.
5. தாராபுரத்தில் தலைமை ஆசிரியை வீட்டில் 50 பவுன்–ரூ.2 லட்சம் திருட்டு
தாராபுரத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.