மாவட்ட செய்திகள்

என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மோடியின் பெயரை சொல்லி ஓட்டு கேட்க தயாரா? அமைச்சர் நமச்சிவாயம் கேள்வி + "||" + NR. Congress Party Are you ready to listen to Modi's name? Minister Namasivayam questioned

என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மோடியின் பெயரை சொல்லி ஓட்டு கேட்க தயாரா? அமைச்சர் நமச்சிவாயம் கேள்வி

என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மோடியின் பெயரை சொல்லி ஓட்டு கேட்க தயாரா? அமைச்சர் நமச்சிவாயம் கேள்வி
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் மோடியின் பெயரை சொல்லி ஓட்டு கேட்க தயாரா? என அமைச்சர் நமச்சிவாயம் கேள்வி விடுத்தார்.
புதுச்சேரி,

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கத்தை ஆதரித்து மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் பல்வேறு பகுதிகளில் ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்து வருகிறார்.


அதன்படி அமைச்சர் நமச்சிவாயம் நேற்று மாலை அய்யங்குட்டிப்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் திறந்த ஜிப்பில் நின்றபடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவருடன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

பிரசாரத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற என்.ஆர்.காங்கிரஸ் எம்.பி. மாநிலத்தின் வளர்ச்சிக்காக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. குறிப்பாக புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தருவதாக அறிவித்தார். அதை அவர் நிறைவேற்றினாரா? என்றால் இல்லை.

பா.ஜனதாவுடன், என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. அவர்களால் நாங்கள் மோடியை பிரதமராக்க மக்களிடம் ஓட்டு கேட்கிறோம் என பகிரங்கமாக அறிவிக்க முடியுமா? நாங்கள் ராகுல்காந்தியை பிரதமராக்க மக்களிடம் வாக்குகள் கேட்கிறோம். ராகுல் காந்தி பிரதமரானால் புதுவைக்கு மாநில அந்தஸ்து, நீட் தேர்வு ரத்து, ஏழை எளிய மக்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் நிதி உதவி உள்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வைத்திலிங்கம் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமுள்ளவர். அவரால் மாநிலத்திற்கு பல்வேறு திட்டங்களை பெற்றுத் தருவார். ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் மாநிலத்திற்கான திட்டங்களை பெற இயலாது. நீங்கள் அளிக்கும் வாக்கு புதுவை மாநிலத்தின் வளர்ச்சியை நிர்ணயிக்க உள்ளது. எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ப.சிதம்பரம் கைதை கண்டிக்கும் போராட்டம்: முக்கிய தலைவர்கள் எங்கே? தொண்டர்கள் அதிர்ச்சி
ப.சிதம்பரம் கைதை கண்டிக்கும் போராட்டத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்காததால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
2. பட்ஜெட்டுக்கு அனுமதி மறுத்த விவகாரம்: காங்கிரஸ்-பா.ஜனதா கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்-மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பாக நேற்று மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ்-பா.ஜனதா கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
3. காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்தநாளை ஆண்டு முழுவதும் கொண்டாட முடிவு
வருகிற 20-ந் தேதி ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
4. காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி தேர்வு - காரிய கமிட்டி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு
டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
5. 1,121 பேருக்கு நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்
திருமங்கலம், டி.கல்லுப்பட்டி பகுதிகளில் நடந்த விழாவில் 1,121 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.