மாவட்ட செய்திகள்

பெரியபாளையத்தில் கடையின் பூட்டை உடைத்து பணம், மோட்டார் சைக்கிள் திருட்டு + "||" + Break the lock of the outlet Money, motorcycle theft

பெரியபாளையத்தில் கடையின் பூட்டை உடைத்து பணம், மோட்டார் சைக்கிள் திருட்டு

பெரியபாளையத்தில் கடையின் பூட்டை உடைத்து பணம், மோட்டார் சைக்கிள் திருட்டு
பெரியபாளையத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம், மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது.
பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தேர்வழி கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார் (வயது40). இவர் பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.


பெரியபாளையத்தில் உள்ள மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யும் கடையை மேலாளர் கவிதா நிர்வகித்து வந்தார். நேற்று காலை கடையை திறக்க வந்த ஊழியர்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கடைக்குள் புகுந்த மர்மநபர்கள் புதிய மோட்டார் சைக்கிள், செல்போன் மற்றும் ரூ. 60 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர்.

கடையில் இருந்த முக்கிய ஆவணங்கள் வீசி விட்டு சென்றிருந்தனர். இது குறித்து கவிதா கடையின் உரிமையாளர் சுகுமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார்.

இது குறித்து சுகுமார் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசு தலைமையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தொழிலாளியின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.16 ஆயிரம் அபேஸ்
தொழிலாளியின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.16 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டுள்ளது.
2. கும்மிடிப்பூண்டியில் கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மின்சார வயர்கள் திருட்டு
கும்மிடிப்பூண்டியில் கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மின்சார வயர்கள் திருடப்பட்டது.
3. தமிழகத்தில் பணப்பட்டுவாடா: தேர்தலை தள்ளிவைக்க கோரிய மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் - தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
தமிழகத்தில் பணப்பட்டுவாடா தொடர்பாக, தேர்தலை தள்ளிவைக்க கோரிய மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
4. பா.ஜனதாவின் ரூ.8 கோடியை பறிமுதல் செய்தது தெலுங்கானா போலீஸ்
தெலுங்கானா பா.ஜனதாவின் 8 கோடி ரூபாயை அம்மாநில போலீஸ் பறிமுதல் செய்துள்ளது.
5. அரசியல் கட்சியினரின் பணம், பொருட்கள் பிடிபடவில்லை கலெக்டர் அருண் பேட்டி
புதுவை அரசியல் கட்சியினரின் பணம், பரிசு பொருட்கள் எதுவும் இதுவரை பிடிபடவில்லை என்று கலெக்டர் அருண் கூறினார்.