மாவட்ட செய்திகள்

உத்திரமேரூர் அருகே மர்ம நபர்கள் தீ வைப்பு; பல ஏக்கர் நெல் பயிர் நாசம் + "||" + The mysterious persons are fire Paddy crop loss

உத்திரமேரூர் அருகே மர்ம நபர்கள் தீ வைப்பு; பல ஏக்கர் நெல் பயிர் நாசம்

உத்திரமேரூர் அருகே மர்ம நபர்கள் தீ வைப்பு; பல ஏக்கர் நெல் பயிர் நாசம்
உத்திரமேரூர் அருகே மர்ம நபர்கள் தீ வைத்ததால் பல ஏக்கர் நெல் பயிர் எரிந்து நாசமானது.
உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த வேடபாளையம் ஏரிக்கரை அருகில் உத்திரமேரூர், வேடபாளையம், பங்களாமேடு, பூந்தண்டலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல் மற்றும் வேர்க்கடலை பயிர் செய்து வருகின்றனர்.


இந்தநிலையில் பூந்தண்டலம் கிராமத்தை சேர்ந்த சேட்டு என்கிற முனுசாமி என்பவருக்கு சொந்தமான நெல்வயலில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசியதில் சுமார் 10 ஏக்கர் நெல் பயிர் மற்றும் 50 மூட்டை நெல் குவியல், பம்புசெட் ஆகியவை எரிந்து நாசமானது.

மேலும் அருகில் இருந்த விளைநிலங்களிலும் தீ பரவியது. இதுகுறித்து பொதுமக்கள் உத்திரமேரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர், உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் பல ஏக்கர் நெல் பயிர் நாசமானது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-

இதுபோன்று ஆண்டுதோறும் மர்மநபர்கள் விளைநிலங்களுக்கு தீ வைத்து விடுகிறார்கள். விவசாயம் நலிந்து போன நிலையில் எங்களுக்கு வேறு வழி இல்லாமல் நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் விவசாயம் செய்கிறோம், அதுமட்டுமில்லாமல் எங்களின் உடல் உழைப்பையும் கொடுத்து இரவு-பகல் பார்க்காமல் விவசாயம் செய்கிறோம். விளைந்து பயிர்களை அறுவடை செய்யும் காலகட்டத்தில் இதுபோன்று மர்ம நபர்கள் தீ வைத்து விடுகின்றனர்.

இதற்காக இப்பகுதியில் உள்ள விவசாய நில உரிமையாளர்கள் வீட்டுக்கு ஒருவர் என்று காவல் காக்கும் பணியில் ஈடுபடுகிறோம். இருந்தபோதிலும் மர்மநபர்கள் இதுபோன்று தீ வைக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார்கள். எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு தகுந்த இழப்பீடு வழங்குவதுடன், தீ வைக்கும் மர்மநபர்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.