விளாத்திகுளத்தில் தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து முன்னாள் எம்.பி. ஜெயதுரை வாக்கு சேகரிப்பு


விளாத்திகுளத்தில் தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து முன்னாள் எம்.பி. ஜெயதுரை வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 16 April 2019 10:00 PM GMT (Updated: 16 April 2019 6:52 PM GMT)

விளாத்திகுளத்தில் தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து முன்னாள் எம்.பி. ஜெயதுரை வாக்கு சேகரித்தார்.

விளாத்திகுளம், 

விளாத்திகுளத்தில் தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து முன்னாள் எம்.பி. ஜெயதுரை வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரிப்பு

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து, முன்னாள் எம்.பி. ஜெயதுரை நேற்று காலையில் விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் தெருவில் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை தொடங்கினார்.

பின்னர் அவர் விளாத்திகுளம் கீழரத வீதி, தாலுகா அலுவலகம் ரோடு, மீரான்பாளையம் தெரு, சாலையம் தெரு, சத்யாநகர், உயர்நிலைப்பள்ளி ரோடு, பங்களா தெரு, சிதம்பரநகர், எட்டயபுரம் ரோடு, காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு திறந்த ஜீப்பில் சென்று, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

குளிர்பதன கிடங்கு

பிரசாரத்தின்போது முன்னாள் எம்.பி. ஜெயதுரை கூறுகையில், விளாத்திகுளத்தில் வத்தல், தானிய வகைகளை நீண்ட நாட்கள் சேமித்து வைக்கும் வகையில், பெரிய அளவிலான குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும். நாகலாபுரத்தில் மூடப்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் மீண்டும் திறக்கப்படும். நாகலாபுரத்தில் அரசு கல்வியியல் கல்லூரி தொடங்கப்படும். குறுக்குசாலை, எட்டயபுரம் பகுதிகளில் நாற்கர சாலையை கடந்து செல்லும் வகையில், மேம்பாலம் அமைக்கப்படும் என்றார்.

அப்போது, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. வேலுச்சாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் செந்தில் ஆறுமுகபாண்டியன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, நகர செயலாளர் வேலுச்சாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story