“நெல்லை தொகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க டெல்லியில் குரல் கொடுப்பேன்” அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் பேச்சு


“நெல்லை தொகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க டெல்லியில் குரல் கொடுப்பேன்” அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் பேச்சு
x
தினத்தந்தி 16 April 2019 9:45 PM GMT (Updated: 16 April 2019 7:26 PM GMT)

நெல்லை தொகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க டெல்லியில் குரல் கொடுப்பேன் என்று அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் கூறினார்.

நெல்லை, 

நெல்லை தொகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க டெல்லியில் குரல் கொடுப்பேன் என்று அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் கூறினார்.

மனோஜ் பாண்டியன் பிரசாரம்

நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் மனோஜ் பாண்டியன் போட்டியிடுகிறார். அவர் நேற்று மாலை தனது இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். பாளையங்கோட்டை புதிய பஸ்நிலையம் அருகில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர். அவர்களுடன் மனோஜ் பாண்டியன் திறந்த ஜீப்பில் ஊர்வலமாக சென்றார். தொண்டர்கள் முன்னும், பின்னும் அணிவகுத்து சென்றனர்.

இந்த ஊர்வலமானது பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டை வழியாக கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலை முன்பு முடிவடைந்தது. அங்கு திறந்த ஜீப்பில் நின்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை தொகுதி முழுவதும்

ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை, தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். நான் இந்த எம்.ஜி.ஆர். சிலை பீடத்தை புதுப்பிக்கவும், இதன் அருகில் உயர் கோபுர மின்விளக்கும் எனது நிதியில் இருந்து செய்து கொடுத்து உள்ளேன். இதேபோல் நெல்லை தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் பஸ் நிறுத்தங்கள், உயர் கோபுர மின்விளக்கு ஆகியவை அமைத்து கொடுத்து உள்ளேன். அரசு அறிவித்த திட்டங்களை சாதி, மதம் பார்க்காமல் செய்து வருகிறது. என்னை வெற்றி பெற செய்யுங்கள். நான் நெல்லை தொகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க டெல்லி நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எம்.ஜி.ஆர். சிலைக்கு

இதைத்தொடர்ந்து அவர், எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், விஜிலாச த்யானந்த், முன்னாள் எம்.எல்.ஏ. தர்மலிங்கம், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், அவைதலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை தலைவர் கணபதிசுந்தரம், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பெரியபெருமாள், இளைஞர் அணி செயலாளர் அரிகரசிவசங்கர், ஜெயலலிதா பேரவை செயலாளர் இ.நடராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் சுத்தமல்லி முருகேசன், ஜோதி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story