மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் நரேந்திரமோடி மீது வெறுப்பு அலை வீசுகிறது தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. பேட்டி + "||" + Tamilnad Ansari MLA of Narendra Modi in Tamil Nadu Interview

தமிழகத்தில் நரேந்திரமோடி மீது வெறுப்பு அலை வீசுகிறது தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. பேட்டி

தமிழகத்தில் நரேந்திரமோடி மீது வெறுப்பு அலை வீசுகிறது தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. பேட்டி
மயிலாடுதுறை அருகே நீடூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே நீடூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் இதுவரை இல்லாத வகையில் இந்த முறை வித்தியாசமாக பிரசாரங்கள் செய்யப்படுகிறது. அவர்கள் செய்த சாதனைகள், செய்ய உள்ள வளர்ச்சி திட்டங்கள் குறித்துதான் கட்சி தலைவர்கள் அறிவித்து தேர்தலை சந்திப்பார்கள். ஆனால் இந்த தேர்தலில் சர்வாதிகாரி நரேந்திரமோடி என்றும், அவரை அகற்ற வேண்டும் என்றும் பிரசாரம் செய்கின்றனர். நாடு முழுவதும் நரேந்திரமோடிக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் அவர் மீது வெறுப்பு அலை வீசுகிறது. ஒரு தொகுதியில் கூட பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறாது. 40 தொகுதியிலும் மதசார்பற்ற கூட்டணியே வெற்றி பெறும். ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு பணநாயகத்தை கட்டுப்படுத்த வேண்டும். தேர்தல் நேரத்தில் பணநாயகத்தை மக்கள் எதிர்க்க வேண்டும். எந்த ஒரு கட்சியும் ஓட்டுக்கு பணம் கொடுக்கமாட்டோம் என்று ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் மாநில செயலாளர் ராசுதீன், மாவட்ட செயலாளர் மாலிக், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜகான் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மோடியை திருடன் என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டதாக தெரிவித்ததற்கு வருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி
மோடியை திருடன் என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டதாக தெரிவித்ததற்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தார்.
2. சிறுபான்மை மக்களின் நண்பன் நரேந்திரமோடி - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
பிரதமர் நரேந்திரமோடி சிறுபான்மை மக்களின் நண்பனாக இருப்பதாக, ஆண்டிப்பட்டியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
3. 5 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை - நாராயணசாமி பேச்சு
கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் பிரதமர் நரேந்திரமோடி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை என்று நாராயணசாமி கூறினார்.
4. மக்களிடையே கலகம் ஏற்படுத்தி சர்வாதிகாரியாக மோடி முயற்சி- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆவேச பேச்சு
மக்களிடையே கலகம் ஏற்படுத்தி சர்வாதிகாரியாக மோடி முயற்சி செய்வதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
5. “இந்தியாவின் சிறந்த காவலாளி மோடிதான்” சரத்குமார் பிரசாரம்
சிறுபான்மை மக்களின் உண்மையான காவல்காரர் மோடி என்று சரத்குமார் கூறினார்.