நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 8 நாட்களுக்கு வெடிபொருட்களை விற்பனை செய்யக்கூடாது கலெக்டர் தகவல்


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 8 நாட்களுக்கு வெடிபொருட்களை விற்பனை செய்யக்கூடாது கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 16 April 2019 10:45 PM GMT (Updated: 16 April 2019 7:35 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் 8 நாட்களுக்கு வெடிபொருட்களை விற்பனை செய்யக்கூடாது என கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) வாக்குப்பதிவும், அடுத்த மாதம் 23–ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் நாகை மாவட்டத்தில் உள்ள வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் வெடிபொருள் கிடங்கு ஆகியவைகள் நேற்று முதல் 19–ந் தேதி வரையிலும், அடுத்த மாதம் 21–ந் தேதி முதல் 24–ந் தேதி வரை 8 நாட்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும்.

இந்த நாட்களில் வெடிபொருட்களை விற்பனை செய்ய கூடாது. மேலும் கடைகளை திறந்து வைத்திருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story