நாளை நாடாளுமன்ற தேர்தல்: தமிழக– கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை


நாளை நாடாளுமன்ற தேர்தல்: தமிழக– கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 16 April 2019 10:15 PM GMT (Updated: 16 April 2019 8:59 PM GMT)

நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தமிழக–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தாளவாடி,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை (வியாழக்கிழமை) நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதன்படி தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழக– கர்நாடக எல்லையான தாளவாடி அருகே புளிஞ்சூர் சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார், பஸ் லாரி மற்றும் கர்நாடக மாநில பஸ்களையும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

மேலும் சத்தியமங்கலம்–மைசூர் தேசிய நெடுஞ்சாலையிலும் தற்காலிகமாக சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு பணி நடைபெற்றது. இந்த கண்காணிப்பு பணியில் போலீசாரும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக– கர்நாடக எல்லையான ஆசனூர், புளிஞ்சூர் சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் அது பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது புளிஞ்சூர் வழியாக வரும் வாகனங்களின் பதிவு எண், விவரம் ஆகியவை ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் இந்த வாகன சோதனைகள் வீடியோ பதிவும் செய்யப்படுகிறது’ என்றார்கள்.


Next Story