தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவத்தினர் உள்பட 4 ஆயிரம் போலீசார் போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் தகவல்


தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவத்தினர் உள்பட 4 ஆயிரம் போலீசார் போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் தகவல்
x
தினத்தந்தி 16 April 2019 10:15 PM GMT (Updated: 16 April 2019 9:43 PM GMT)

மாவட்டத்தில் 160 துணை ராணுவத்தினர் உள்பட 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் கூறினார்

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் கூறியதாவது:– மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்கள். இதில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தேர்தலையொட்டி பாதுகாப்பிற்காக ஆந்திரா மற்றும் டெல்லியில் இருந்து துணை ராணுவத்தினர் 160 பேர்கள் வந்துள்ளனர். இதுதவிர பட்டாலியன் போலீசார் 210 பேர் வந்துள்ளனர்.

இவர்களுடன் ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசார் மற்றும் ஆயுதப்படையினர், உள்ளூர் போலீசார் உள்பட 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மாவட்டம் முழுவதும் 44 வாகனங்களில் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசாரும், 11 வாகனங்களில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், போலீசாரும் வாகனங்களில் ரோந்து சுற்றி வருவார்கள்.

இதுதவிர 53 மோட்டார் சைக்கிளில் போலீசார் ரோந்து சுற்றி வருவார்கள். பதட்டமான வாக்குச்சாவடி உள்ள பகுதிகள் உள்பட முக்கிய இடங்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர். வாக்குசாவடிச்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லவும், தேர்தல் முடிந்த பின்னர் அவைகளை பத்திரமாக கொண்டு வரவும் 109 வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர அவசர கால தேவைக்காக வஜ்ரா வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போதுமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story