மாவட்ட செய்திகள்

இலங்கை சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் விடுதலை + "||" + 4 fishermen released from Sri Lanka prison

இலங்கை சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் விடுதலை

இலங்கை சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் விடுதலை
இலங்கை சிறையில் இருந்து ராமேசுவரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 8–ந்தேதி மீன்பிடிக்க சென்ற ஒரு படகையும், அதில் இருந்த கனிஸ்டன், முருகேசன், முனியசாமி உள்பட 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள் நேற்று வழக்கு விசாரணைக்காக ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நல்லெண்ண அடிப்படையில் இந்த 4 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மேலும் படகின் உரிமையாளர் வருகிற ஜூன் 7–ந்தேதி உரிய ஆவணங்களுடன் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் எனவும், அவ்வாறு ஆஜராக தவறினால் சம்பந்தப்பட்ட படகு அரசுடைமையாக்கப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

தற்போது விடுதலை செய்யப்பட்ட 4 மீனவர்கள் உள்பட 26 பேர் இலங்கையில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளின் பராமரிப்பில் உள்ளனர். இதுதவிர ராமேசுவரத்தை சேர்ந்த 12 மீனவர்களும், காரைக்காலை சேர்ந்த 18 மீனவர்களும் என மொத்தம் 30 பேர் இலங்கை சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 4 பேர் கைது இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
2. இலங்கை சிறையில் உள்ள 7 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு
இலங்கை சிறையில் உள்ள 7 ராமேசுவரம் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி, அவர்களின் குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
3. மேற்கு கடற்கரையில் 31–ந் தேதியுடன் தடைகாலம் நிறைவு: கடலுக்கு செல்ல தயாராகும் குளச்சல் விசைப்படகு மீனவர்கள்
குமரி மேற்கு கடற்கரை பகுதியில் வருகிற 31–ந் தேதி நள்ளிரவுடன் தடைகாலம் நிறைவு பெறுவதை தொடர்ந்து குளச்சல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல ஆயத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
4. கடலில் மூழ்கிய 2 குமரி மீனவர்கள் உயிர் தப்பியது பற்றி உருக்கமான தகவல் 8 மணி நேரம் நீந்தி கரை சேர்ந்தனர்
மீன்பிடிக்க சென்ற போது படகு உடைந்து 5 குமரி மீனவர்கள் கடலுக்குள் விழுந்து விட்டனர். இதில் 3 மீனவர்களை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. உயிர் தப்பிய 2 பேர் 8 மணி நேரம் கடலில் நீந்தி கரை சேர்ந்துள்ள உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
5. பலத்த சூறாவளி காற்று: ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை
பலத்த சூறாவளி காற்று காரணமாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது.