மாவட்ட செய்திகள்

சேலத்தில் மது பதுக்கி விற்பனை, மூதாட்டி உள்பட 6 பேர் கைது + "||" + In Salem Alcohol hoardings sold, 6 people arrested including the goddess

சேலத்தில் மது பதுக்கி விற்பனை, மூதாட்டி உள்பட 6 பேர் கைது

சேலத்தில் மது பதுக்கி விற்பனை, மூதாட்டி உள்பட 6 பேர் கைது
சேலத்தில் மது பதுக்கி விற்பனை செய்த மூதாட்டி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,

சேலத்தில் பல்வேறு இடங்களில் மதுபதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் சேலம் கொண்டலாம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார், கொண்டலாம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் மதுபானம் பதுக்கி விற்பனை செய்வது தெரிந்தது.

இதையொட்டி அந்த பகுதியை சேர்ந்த பழனிசாமி (வயது 32) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போன்று பூலாவரி ஜங்ஷன் பகுதியில் சோதனை செய்த போது, அங்கு மதுவிற்பனை செய்த அந்த பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் மது விற்பனை செய்த சண்முகசுந்தரம் (47) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் போலீசார் ஜெ.ஜெ.கார்டன் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது மதுபதுக்கி விற்பனை செய்த மூதாட்டி சரோஜா (62) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 32 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அம்மாபேட்டை பகுதியில் சோதனை செய்த போது, அங்கு மது விற்ற அந்த பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (38), தனசேகரன் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 117 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்படி சேலத்தில் மது விற்பனை செய்த மூதாட்டி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.