வானவில் : குளிர்ந்த காற்றை தரும் ‘ஏர் வேர்ல்’


வானவில்  : குளிர்ந்த காற்றை தரும் ‘ஏர் வேர்ல்’
x
தினத்தந்தி 17 April 2019 3:36 PM IST (Updated: 17 April 2019 3:36 PM IST)
t-max-icont-min-icon

சுட்டெரிக்கும் வெயிலில் ஏ.சி. இருக்கும் இடத்தை தேடி நம் கால்கள் தானாக நடக்கும். அதே நேரம் குளிர் காலங்களில் கதகதப்பான இடங்களை நோக்கி செல்வோம்.

இந்த இரண்டையும் செய்ய கூடிய ஒரே கருவி இருந்தால்? அதுவும் கையடக்கமான வடிவத்தில். ஆம் மக்கள் நீண்ட நாட்களாக ஏங்கி கொண்டிருந்த ஒரு தயாரிப்பு தான் இந்த ஏர் வேர்ல் ( AIRWIRL ) நாம் எங்கெல்லாம் செல்கிறோமோ அங்கெல்லாம் நம்முடனே இதனை எடுத்து செல்லலாம்.

பார்ப்பதற்கு ஒரு டம்ளரை போன்று இருக்கும் இதனுள் நாம் ஐஸ் கட்டிகளை நிரப்பி, ஒரு பொத்தானை அழுத்தினால் அதனுள்ளிருந்து குளிர்ந்த காற்று வெளி வரும். இதுவே குளிர்காலங்களில் ஹீட் செய்யக்கூடிய வார்மர்ஸ் பாக்கெட்டுகளை இதனுள் நிரப்பி எடுத்துச் சென்றால், தேவைப்படும் போது வெப்பமான காற்றை வாங்கி கொள்ளலாம். இதனுள் இருக்கும் பேன் மற்றும் வெப்ப ஆற்றல் அடர்த்தியாக்கிகள் மூலம் நம்மைச் சுற்றியுள்ள காற்றை குளிர்வித்தோ, வெப்பப்படுத்தியோ தருகிறது இந்த கப். பேட்டரியில் இயங்கும் இது நன்கு நீடித்து உழைக்கும். எளிதாக எடுத்து செல்லக் கூடிய வடிவத்தில் இருப்பது இதன் பெரிய பலம். கையில் பிடித்துக் கொள்வதற்கு ஏதுவாக கைப்பிடியும் இருக்கிறது. இதன் விலை ரூ.9100.

Next Story