மாவட்ட செய்திகள்

வானவில் : 3 கேமராவுடன் ‘கேமோன் ஐ4’ + "||" + Vanavil : 3 camera in 'kemon 4'

வானவில் : 3 கேமராவுடன் ‘கேமோன் ஐ4’

வானவில்  : 3 கேமராவுடன் ‘கேமோன் ஐ4’
ஸ்மார்ட்போன்களில் இப்போது மிகவும் பிரபலமாகிவரும் பிராண்ட்களில் கேமோன் பிராண்டும் ஒன்றாகும்.
இந்நிறுவனம் கேமராவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 3 கேமராக்களைக் கொண்ட ஐ4 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. மொத்தம் 3 மாடல்கள் இதில் வந்துள்ளன. 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ.9,599. இதேபோல 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம் கொண்டதன் விலை ரூ.10,599. 4 ஜி.பி. ரேம் 64 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை ரூ.11,999. இதில் பின்பகுதியில் உள்ள கேமராவில் முதன்மையான ஒன்று 13 மெகா பிக்ஸெல்லைக் கொண்டது.

அடுத்தது 8 மெகா பிக்ஸெல்லைக் கொண்டது. மூன்றாவது கேமரா 2 மெகா பிக்ஸெல்லைக் கொண்டது. 3 கேமராக்களும் இதில் பதிவாகும் காட்சிகளை மிகச் சிறப்பாக பின்புலத் தன்மையோடு பதிவுசெய்யும். அத்துடன் செல்பி பிரியர்களைக் கருத்தில் கொண்டு முன்பகுதியில் 16 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. 41 பிக்ஸெல் தொழில்நுட்பம் கொண்ட இது செல்பி படங்களையும் துல்லியமாக பதிவு செய்யும். இதில் உள்ள 6.22 அங்குல தொடு திரையில் காட்சிகள் தெளிவாகக் கிடைக்கும். இதனால் பயணத்தின்போது திரைப்படங்களையும், விருப்பமான பாடல்களையும் காட்சியுடன் கண்டு ரசிக்க முடியும். மிட்நைட் பிளாக், அக்வா புளூ, நெபுலா பிளாக், ஷாம்பைன் கோல்டு ஆகிய நிறங்களில் இது கிடைக்கிறது. இதில் 3,600 எம்.ஏ.ஹெச். பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ராக்கெட் சார்ஜ் நுட்பம் இருப்பதால் 2 மணி நேரம் செயல்பட 10 நிமிடம் சார்ஜ் செய்தாலே போதுமானது.

இந்தியாவில் மாறி வரும் தட்ப வெப்ப நிலைக்கேற்ப கைகளில் ஈரப்பதம் மாறும். கோடைக் காலங்களில் வியர்வை காரணமாக ஈரப்பதம் இருக்கலாம். இதனால் விரல் ரேகை பதிவு மூலம் பல சமயங்களில் ஆன் செய்ய முடியாத சூழல் உருவாகும். அதைத் தவிர்க்கும் விதமாக இதில் ஆன்டிஆயில் பிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது. இது உங்கள் விரல்ரேகை எப்படி இருந்தாலும் அதை உணர்ந்து போனை செயல்படுத்தும்.

தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : குளிர்ந்த காற்றை தரும் ‘ஏர் வேர்ல்’
சுட்டெரிக்கும் வெயிலில் ஏ.சி. இருக்கும் இடத்தை தேடி நம் கால்கள் தானாக நடக்கும். அதே நேரம் குளிர் காலங்களில் கதகதப்பான இடங்களை நோக்கி செல்வோம்.
2. வானவில் : மோட்டார் சூட்கேஸ்
சில தொழில்நுட்பங்கள் உடல் உழைப்பை விரும்பாதவர்களுக்காகவே உருவாக்கப்படுகின்றன.அந்த வகையை சேர்ந்தது தான் இந்த மோடோ பேக்.
3. வானவில் : சோனியின் சிறிய ரக கேமரா
மின்னணு பொருள்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பானின் சோனி நிறுவனம் சிறிய ரக கேமராவை அறிமுகம் செய்துள்ளது.
4. வானவில் : சாம்சங்கின் 6 சீரிஸ்
மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் தனது பிரபல 6 சீரிஸ் வரிசையில் ஸ்மார்ட் டி.வி.க்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
5. வானவில் : தாம்சன் யு.டி9 4 கே
தாம்சன் நிறுவனம் டி.வி. தயாரிப்பில் பழமையான முன்னோடி நிறுவனமாகும். ஜப்பானிய வரவுகள் மற்றும் தென் கொரிய தயாரிப்புகளின் போட்டியை சமாளிக்க முடியாமல் இது சில காலம் முடங்கிப் போனது.