மாவட்ட செய்திகள்

ஊத்தங்கரையில்மது பதுக்கி விற்ற 2 பெண்கள் கைது742 பாட்டில்கள் பறிமுதல் + "||" + In Uthangarai Two women arrested for selling liquor 742 bottles seized

ஊத்தங்கரையில்மது பதுக்கி விற்ற 2 பெண்கள் கைது742 பாட்டில்கள் பறிமுதல்

ஊத்தங்கரையில்மது பதுக்கி விற்ற 2 பெண்கள் கைது742 பாட்டில்கள் பறிமுதல்
ஊத்தங்கரையில் மது பதுக்கி விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 742 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஊத்தங்கரை,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்கள் மதுக்கடைகளை மூடிட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ஊத்தங்கரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சிலர் சட்ட விரோதமாக மது பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ஊத்தங்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் ஊத்தங்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊத்தங்கரை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த செந்தாமரை, நேரு நகரை சேர்ந்த சின்னதாய் ஆகிய இருவரும் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து செந்தாமரை, சின்னதாய் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 742 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுவாங்க தண்டவாளத்தை கடந்தபோது விபரீதம்; மயிரிழையில் உயிர் தப்பிய தொழிலாளி
ஈரோடு அருகே மது வாங்க மோட்டார் சைக்கிளில் ரெயில் தண்டவாளத்தை கடந்த தொழிலாளி மயிரிழையில் உயிர் தப்பினார். ரெயில் என்ஜின் டிரைவரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது.
2. மது குடிப்பதை கண்டித்த மனைவி ஆற்றில் தள்ளி கொலை
மது குடிப்பதை கண்டித்த மனைவியை, அவரது கணவர் ஆற்றில் தள்ளி கொலை செய்தார்.
3. மது குடித்துவிட்டு வகுப்புக்கு வந்த 8 மாணவர்களுக்கு நூதன தண்டனை; காமராஜர் இல்லத்தை சுத்தம் செய்ய நீதிபதி உத்தரவு
மது போதையில் வகுப்புக்கு வந்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு, மதுரை ஐகோர்ட்டு நீதிபதி புதுமையான தண்டனை அளித்தார். காமராஜர் இல்லத்தை சுத்தம் செய்வதுடன் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ள உத்தரவிட்டார்.
4. பேரகணியில் மது, புகையிலை பயன்பாட்டுக்கு தடை அறிவிப்பு பலகை வைத்த பொதுமக்கள்
பேரகணியில் மது, புகையிலை பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் அறிவிப்பு பலகை வைத்தனர்.
5. மது விற்ற பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து மதுபாட்டில்கள் உடைத்து எரிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்காததால் பெண்கள் ஆத்திரம்
சீர்காழி அருகே மது விற்பனைக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பெண்கள், மது விற்ற பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து மதுபாட்டில்களை உடைத்து எரித்தனர்.