‘மனித நேயம் இருந்தால் மட்டுமே கண்ணீர் வரும்' எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு, முதல்-மந்திரி குமாரசாமி பதிலடி
கண்ணீர் விட்டு வாக்காளர்களை கவர நினைக்கிறார்கள் என்று விமர்சனம் செய்த எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு, முதல்-மந்திரி குமாரசாமி பதிலடி கொடுத்து உள்ளார்.
சிவமொக்கா,
கண்ணீர் விட்டு வாக்காளர்களை கவர நினைக்கிறார்கள் என்று விமர்சனம் செய்த எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு, முதல்-மந்திரி குமாரசாமி பதிலடி கொடுத்து உள்ளார். மனித நேயம் இருந்தால் மட்டுமே கண்ணீர் வரும் என்று அவர் கூறினார்.
மனித நேயம் இருந்தால்...
கர்நாடகத்தில் 2 வது கட்டமாக தேர்தல் நடக்க உள்ள சிவமொக்கா தொகுதியில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி கட்சிகள் சார்பில் மதுபங்காரப்பா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சொரப் தாலுகா ஆவனட்டி கிராமத்தில் முதல்-மந்திரி குமாரசாமி பிரசாரம் செய்தார். இதையடுத்து அவரிடம் தேவேகவுடா குடும்பத்தினர் கண்ணீர் விட்டு மக்களை கவர நினைக்கலாம் என்று எஸ்.எம்.கிருஷ்ணா விமர்சித்தது பற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளிக்கையில் கூறியதாவது:-
நான் நினைத்த போது எல்லாம் கண்ணீர் வராது. மனித நேயம் இருந்தால் மட்டுமே கண்ணீர் தானாக வரும். இது எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு தெரியாது.
தோல்வி உறுதி
கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசு நாட்டிற்கு எந்த வளர்ச்சி பணியும் செய்யவில்லை. தற்போது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று மோடி கேட்டு வருகிறார்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட்டதா? எனக்கு இதயநோய் இருந்தாலும், நான் இஸ்ரேல் நாட்டுக்கு சென்று அங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நீர்ப்பாசன திட்டத்தை கர்நாடகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து உள்ளேன்.
சிவமொக்கா தொகுதியில் இந்த முறை போட்டியிடும் ராகவேந்திராவின் தோல்வி உறுதி. மது பங்காரப்பா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story