மாவட்ட செய்திகள்

வலங்கைமான் அருகே பாதை தகராறில் விவசாயி மீது தாக்குதல் 2 பேர் கைது + "||" + Two people have been arrested for attacking a farmer in the disputed road near Valangaiman

வலங்கைமான் அருகே பாதை தகராறில் விவசாயி மீது தாக்குதல் 2 பேர் கைது

வலங்கைமான் அருகே பாதை தகராறில் விவசாயி மீது தாக்குதல் 2 பேர் கைது
வலங்கைமான் அருகே வயலுக்கு செல்லும் பாதை தகராறில் விவசாயியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியை அடுத்த சோத்திரியம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 60). விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முனியாண்டி என்பவருக்கும் அருகருகே நிலங்கள் உள்ளன. இதில் சாகுபடி மற்றும் அறுவடை காலங்களில் வயல் பகுதிக்கு சென்று வரும் பாதை தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.


சம்பவத்தன்று கிருஷ்ணமூர்த்திக்கும் முனியாண்டிக்கும் பாதை தகராறு ஏற்பட்டது.

இதில் ஏற்பட்ட தகராறில் முனியாண்டியின் மகன்கள் பாண்டியன் (55), குருமூர்த்தி (47) ஆகியோர் கம்பு, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கிருஷ்ணமூர்த்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தியின் மகன் மணிகண்டன் (35) வலங்கைமான் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியன், அவருடைய தம்பி குருமூர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் பாண்டியனின் மகன் கார்த்தி (24) என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. சிவகங்கை அருகே மின்னல் தாக்கி 23 ஆடுகள் பலி
சிவகங்கை அருகே மின்னல் தாக்கி 23 ஆடுகள் பலியாகின.
2. திருமணம் செய்வதாக ஆசை காட்டி பெண் டாக்டரிடம் ரூ.18 லட்சம் மோசடி செய்த என்ஜினீயர் கைது
திருமணம் செய்வதாக ஆசை காட்டி பெண் டாக்டரிடம் ரூ.18¾ லட்சம் மோசடி செய்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். அவர் போலி டாக்டராக நடித்தது பற்றியும் பரபரப்பு தகவல் கிடைத்து உள்ளது.
3. கருங்கல் அருகே கோவில்களில் திருடிய 2 பேர் கைது
கருங்கல் அருகே கோவில்களில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. நிலத்தகராறில் தாக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி பலி : கொலை வழக்காக மாற்றம் - 3 பேர் கைது
தானிப்பாடி அருகே நிலத்தகராறில் தாக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. அந்தியூர் பகுதியில் பலத்த மழை: மின்னல் தாக்கியதில் மாட்டுக்கொட்டகை எரிந்து நாசம்
அந்தியூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் மாட்டுக்கொட்டகை எரிந்து நாசம் ஆனது. மேலும் தென்னை மற்றும் புளியமரத்திலும் தீப்பிடித்தது.