முட்டை உடைவதை தவிர்க்க கோழித்தீவனத்தில் சோடாஉப்பு சேர்க்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல்


முட்டை உடைவதை தவிர்க்க கோழித்தீவனத்தில் சோடாஉப்பு சேர்க்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல்
x
தினத்தந்தி 17 April 2019 10:00 PM GMT (Updated: 17 April 2019 6:50 PM GMT)

முட்டை உடைவதை தவிர்க்க கோழித்தீவனத்தில் சோடாஉப்பு சேர்க்க வேண்டும் என்று ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 2 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். 4 மி.மீட்டர் மழைக்கு வாய்ப்பு உள்ளது. காற்று மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் தெற்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 102.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக இன்று 78.8 டிகிரியாகவும், நாளை 80.6 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 75 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 30 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் இன்றும், நாளையும் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் பகல் மற்றும் இரவு வெப்ப அளவுகள் குறைய வாய்ப்பு இல்லை. கோழிகளில் மிக அதிக வெப்பம் காரணமாக தீவன எடுப்பும், முட்டை எடையும் குறையும்.

இதை நிவர்த்தி செய்யும் பொருட்டு, தீவனத்தில் அதிக புரதம் சேர்க்க வேண்டும். மேலும் முட்டை உடைவதை தவிர்க்க, கோழித்தீவனத்தில் சோடா உப்பு மற்றும் அமினோ அமிலங்கள் சேர்க்க வேண்டும். மேலும் முட்டை எடையை தக்க வைத்து கொள்ள தீவனத்தில் பீடைன் ஹைட்ரோ குளோரைடு என்ற பொருளை சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story